கோவிலின் தங்க நகைகளை திருடி போலி நகைகள் வைத்த அர்ச்சகர் கோவையில் கைது!!!

கோவிலின் தங்க நகைகளை திருடி போலி நகைகள் வைத்த அர்ச்சகர் கோவையில் கைது!!!

கோவை, மருதமலை சுப்பிரமணி சுவாமி தேவஸ்தான கோயிலின் உபகோயிலான, வடவள்ளி கரிவரதராஜ பெருமாள் கோயிலில், தங்க நகை சுமார் 14 கிராம் எடுத்து அதை உருக்கி விற்பனை செய்து விட்டு, அதற்கு பதிலாக போலி நகையை வைத்ததாக கோயில் பூசாரி கைது.

வடவள்ளி பகுதியில் உள்ள கரி வரதராஜ பெருமாள் கோவில் தற்காலிக தினக் கூலி அர்ச்சகர் ஸ்ரீ ஸ்ரீ வத்சாங்கன் என்பவர் கடந்த ஒரு மாத காலத்திற்கு முன்பு தினக்கூலி அர்ச்சகர் பணியில் சேர்ந்து உள்ளார். இந்நிலையில் கடந்த 23, 24.04.2024 ம் தேதி அன்று இந்து சமய அறநிலை துறை துணை ஆணையர், நகை சரிபார்க்கும் அலுவலர் மற்றும் அறங்காவலர் குழு உறுப்பினர்கள் கோவில் நிர்வாகத்தில் உள்ள நகைகளை சரி பார்த்த பொழுது சுமார் 14 கிராம் தங்கத்திலான சுவாமிக்கு அணிவிக்கப்படும் தங்க தாலி மற்றும் குண்டுமணிகள் திருடப்பட்டு அதற்கு பதிலாக போலி நகைகளை செய்து வைத்து இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதுகுறித்து துணை ஆணையர் ஹர்ஷினி வடவள்ளி காவல் நிலையத்தில் புகார் அளித்தார். புகாரி பேரில் அர்ச்சகரிடம் நடத்திய விசாரணையில் திருடப்பட்ட நகைகளை பெரிய கடை வீதியில் உள்ள தங்கம் ஜுவல்லரியில் விற்று பணத்தை வாங்கி விட்டதாக தெரிவித்து உள்ளார். அந்த நகைகளை பறிமுதல் செய்த காவல் துறையினர் அர்ச்சகர் மீது வழக்கு பதிவு செய்து கைது செய்தனர். மேலும் நடத்திய விசாரணையில் கடந்த 2023 ஆம் ஆண்டு புதுப்பேட்டையில் கோதண்ட ராமர் கோவிலில் எட்டு கிராம் தங்கம் மற்றும் 7 கிலோ வெள்ளி திருடியதற்காக புழல் சிறையில் சிறை தண்டனை அனுபவித்து உள்ளார் என்பது தெரிய வந்து உள்ளது.