வயநாடு துயர சம்பவம்: பலி எண்ணிக்கை 7 ஆக உயர்வு

வயநாடு மேப்பாடி அருகே உள்ள கள்ளாடி பகுதியில் சுரங்கப்பாதை அமைக்கும் இடத்தில் கடந்த 7ம் தேதி மண் சரிவு ஏற்பட்டது இதில் சுரங்கப்பாதை பணியில் ஈடுபட்டிருந்த தொழிலாளர்கள் சிக்கினர்.போலீசார், பேரிடர் மீட்புப் படையினர் உள்பட 500க்கும் மேற்பட்டோர் நடத்திய தேடுதல் வேட்டையில் முதல் நாளில் 3 உடல்கள் மீட்கப்பட்டன. மண் சரிவு ஏற்பட்ட பகுதியில் பணியில் இருந்த 5 பேரை காணவில்லை என்று சுரங்கப்பாதை கட்டுமான நிறுவனம் கூறியதை தொடர்ந்து அவர்களைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டது.

நேற்று முன்தினம் மேலும் 3 உடல்கள் மீட்கப்பட்டன. இதைத்தொடர்ந்து பலியானவர்கள் எண்ணிக்கை 6ஆக உயர்ந்தது. மேலும் 2 பேரை தேடும் பணி நேற்று 4வது நாளாக தொடர்ந்தது. இதில் அங்குள்ள மீனாட்சி ஆற்றிலிருந்து மேற்குவங்க மாநிலம் கிழக்கு மிட்னாப்பூர் பகுதியைச் சேர்ந்த கட்டுமான நிறுவனத்தின் சர்வேயரான ராகேஷ் குஜைத்தின் (24) உடல் மீட்கப்பட்டது. இதைத் தொடர்ந்து மண் சரிவில் சிக்கி இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 7ஆக உயர்ந்துள்ளது.