பொது வழியில் ஒரு குடும்பத்தினருக்கு மட்டும் வழி விடமால் கற்களை கொண்டு வழி மறித்த உறவினர்கள், பள்ளி செல்ல முடியமால் தவிக்கும் பிள்ளைகள்.

தருமபுரி அருகே உள்ள உழவன்கொட்டாய் அடுத்த மிட்டநூலஅள்ளி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி இவருக்கு ஒரு மனைவி இரண்டு பிள்ளைகளுடன் மிட்டாநூலஅள்ளியில் குடும்பத்துடன் வசித்து வருகிறார். இவர் கூலி வேலைக்காக உடுப்பி மாவட்டத்திற்கு சென்று மாதம் ஒரு முறை வீட்டிற்கு வருவது வழக்கம் மனைவி மகன், மகள்கள் தனியாக வீட்டில் வசித்து மாடுகளை வளர்த்து வருகின்றனர். இந்நிலையில் இவர் வீட்டிற்கும் இவர் உறவுக்காரரான கிருஷ்ணமூர்த்தி சின்னசாமி நரசிம்மன் வீட்டிற்கும் செல்வதற்கு பொது வழி பயன்படுத்தி வந்தனர். இந்நிலையில் கடந்த 3 தலைமுறைகளாக இவர்களுக்குள் பொது வழிப்பாதை பயன்படுத்துவதில் தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. பல முறை காவல்துறையிடம் புகார் அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்காத நிலையில் நேற்று முன்தினம் கிருஷ்ணமூர்த்தியின் உறவினர் பொது வழியில் கருங்கற்களை வைத்து வழியை மறித்து உள்ளனர். கடந்த திங்கட்கிழமை அன்று கிருஷ்ணமூர்த்தியின் மகன், மகள் பள்ளிக்கு செல்லும்போது இவ்வழியாக வரக்கூடாது எனவும் மிரட்டியுள்ளதாகவும் தெரிவித்தனர். இதனால் உடனடியாக காவல்துறையும், மாவட்ட நிர்வாகமும் நடவடிக்கை எடுத்து வழித்தடம் வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்..