குடியரசுத் தின விழா சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பதாக் அல் சிசி-க்கு அழைப்பு..!

டெல்​லியில் நடைபெறவுள்ள குடியரசுத் தின விழா கொண்டாட்டங்களுக்‍கான சிறப்பு அழைப்பாளராக எகிப்து அதிபர் அப்தெல் பதாக் அல் சிசி பங்கேற்பார் என தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு ஆண்டும் குடியரசுத் தின கொண்டாட்டத்தின் போது, சிறப்பு விருந்தினர்களை அழைப்பது வழக்‍கம். அந்த வகையில் இந்த ஆண்டுக்‍கான சிறப்பு விருந்தினராக எகிப்து அதிபர் அப்தெல் பதாக் அல் சிசி பங்கேற்பார் என வெளியுறவு அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்தியா எகிப்து இரு நாடுகள் இ​டையேயான 75 ஆண்டு கால நட்புறவை பேணும் வகையில், அந்நாட்டு அதிபர் சிறப்பு விருந்தினராக பங்கேற்பார் என்றும் தெரிவிக்‍கப்பட்டுள்ளது.

மேலும், அடுத்த அண்டு ஜி20 மாநாட்டுக்‍கு இந்தியா தலைமைத்துவம் ஏற்க உள்ள நிலை​யில், அதில், விருந்தினர் நாடாக பங்கேற்க எகிப்துக்‍கு அழைப்பு விடுக்‍கப்பட்டுள்ளதாகவும் வெளியுறவு துறை தெரிவித்துள்ளது.