நீலகிரி அதிமுக பாராளுமன்ற வேட்பாளரை ஆதரித்து பிரபல நடிகர் ரவி மரியா தீவிர தேர்தல் பிரச்சாரம்.!!

உதகை: பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு நீலகிரி மாவட்ட குன்னூர் அருவங்காடு ஜெகதாள ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகத்தின் பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி அவர்களின் ஆணைக்கிணங்க நீலகிரி மாவட்டத் தேர்தல் பொறுப்பாளர் எஸ் பி வேலுமணி உத்தரவின் பெயரில் நீலகிரி மாவட்ட அஇஅதிமுக மாவட்ட செயலாளர் கப்பச்சி டி வினோத், முன்னாள் குன்னூர் சட்டமன்ற உறுப்பினர் ஆர் சாந்தி ராமு தலைமையில், அருவங்காடு ஒன்றிய செயலாளர் பேரட்டி ராஜு குன்னூர் நகர செயலாளர் சரவணன் நகர மன்ற கவுன்சிலர் குருமூர்த்தி, ஜகதல பேரூராட்சி செயலாளர் போலன், மாவட்டக் கழக துணைச் செயலாளர் உஷா, மகளிர் அணி செயலாளர் சாந்தா, கழகத் தலைமை பேச்சாளர் விஜயலட்சுமி, ஆகியோரின் முன்னிலையில், வருகின்ற பாராளுமன்றத் தேர்தலில் லோகேஷ் தமிழ்ச்செல்வன் அவர்களை ஆதரித்து அருவங்காடு பகுதியில் வாக்கு சேகரித்தார்கள், அருவங்காடு பாய்ஸ் கம்பெனி சேலம் அதிகரட்டி போன்ற இடங்களுக்கு தேர்தல் பிரச்சாரத்திற்கு
சிறப்பு விருந்தினராக வருகை புரிந்த பிரபல நடிகரும் அதிமுக சிறப்பு பேச்சாளருமான ரவி மரியா பேசியதாவது
ஏழு முறை தொகுதி மாறி வெற்றி பெற்று இரண்டு முறை சபாநாயகராக இருந்த முன்னாள் அமைச்சர் தனபால் அவர்களின் மகன் லோகேஷ் தமிழ்செல்வன் என்பது எல்லாருக்கும் தெரியும்,இவர்
படித்தவர் ஆங்கிலம் தெரிந்தவர் சிறு வயதிலிருந்து அரசியல்வாதி குடும்பத்தில் வளர்ந்தவர் தகப்பனின் அறிவாற்றலின் வளர்ந்தவர் எனவே இவரைப் போன்றவர்கள் பாராளுமன்றத்தில் துணிச்சலோடு ஆங்கிலத்திலும் பேசி நீலகிரி மாவட்டத்திற்கு பல நல்ல திட்டங்களை கொண்டு வருவதற்கு இவருக்கு வாக்களித்து வெற்றி பெற செய்யுங்கள், இன்று உரையாற்றினார், தொடர்ந்து முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆ சாந்தி ராமு பேசுகையில் திமுக ஆட்சியில் கொண்டுவரப்பட்ட மகளிர் பெண்கள் உரிமைத் திட்ட ரூபாய் ஆயிரம் அநேக பெண்களுக்கு கிடைப்பதில்லை முதியோர் உதவித்தொகை பெற்ற பெண்களுக்கு மட்டுமே கிடைக்கிறது
மற்றவர்கள் ஏமாற்றப்படுகிறார்கள் என்று சுட்டி காட்டினார்,
நீங்கள் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் நமது அம்மா அவர்களின் ஆட்சியில் இருக்கும் பொழுது மின் கட்டணம் உயர்வு இல்லை,சொத்து வரி உயர்வு இல்லை, தண்ணீர் வரி உயர்வு இல்லை, மற்றும் பெண்களுக்கு தாலிக்கு தங்கம் வழங்கினார்,இன்னும் பல நல்ல திட்டங்களை அவர்களின் ஆட்சியின் போது நடைமுறையில் இருந்தன தற்போது ஆட்சி செய்யும் திமுக அரசு அனைத்து திட்டங்களையும் நிறுத்தி விட்டன,இதற்கெல்லாம் சரியான நேரம் இப்பொழுது வந்திருக்கிறது வருகின்ற 19ஆம் தேதி அன்று நடைபெறும் பாராளுமன்ற தேர்தலில் நமது வேட்பாளரை இரட்டை இலை சின்னத்தில் வாக்களித்து வெற்றி பெற செய்து திமுக பாஜக ஆட்சியை கூண்டோடு வீட்டுக்கு அனுப்ப வேண்டும் என்று உரையாற்றி வாக்கு சேகரித்தார்,நடைபெற்ற வாக்கு சேகரிப்பு கூட்டத்தில் வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் உரையின்போது அருவங்காடு பகுதி வாக்காள பெருமக்களுக்கு வேட்பாளர் வணக்கம் தெரிவித்து கூறியதாவது திமுகவின் ஆட்சியில் நாம் அனைவரும் அனேக கஷ்டங்களுக்கு உள்ளாகி உள்ளோம், இந்த நீலகிரி மாவட்டத்தின் 10 வருட ஆட்சியில் இருந்த எம்பி ஆ.இராசா நமது தொகுதிக்கும் தகுதிக்கும் எந்த ஒரு சலுகையும் செய்யவில்லை, மற்றும் பாஜக வேட்பாளர் மத்திய அமைச்சராக மூன்று வருடம் பணிபுரிந்தும் இந்த நீலகிரி மாவட்டத்திற்கு ஏதாவது செய்து விட்டு நான் இதை எல்லாம் செய்திருக்கிறேன் என்று சொல்லி வாக்கு சேகரித்தால் பரவாயில்லை மீண்டும் மூன்று நாட்களுக்கு முன்னதாக எம்பி ஆகிவிட்டு மறுபடியும் நீலகிரி மாவட்ட பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடுகிறேன் நீங்கள் எல்லாம் ஆதரவு கொடுங்கள் என்று எப்படி கேட்கிறார்கள் இவர்களை எல்லாம் நம்பி ஏமாந்து விடாதீர்கள் இரண்டு வேட்பாளர்களும் நம்மை ஏமாற்றி விடுவார்கள் நன்றாக புரிந்து கொள்ளுங்கள், அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்ற கழகம் என்றுமே மக்களுக்காக பல நல திட்டங்களை கொண்டு வந்த கழகம், ஆனால் தற்போதைய திமுக ஆட்சி அனைத்து திட்டங்களையும் நிறுத்திவிட்டது,
அதிமுக மக்களுக்கு செய்யும் நல்ல திட்டங்களை ஒருபோதும் திமுக பாஜக ஆட்சிகள் ஏற்றுக் கொள்ளாது என்று கூறினார்,நீங்கள் அனைவரும் ரெட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து என்னை வெற்றி பெற செய்யுங்கள் என்று உங்களை அன்போடு வேண்டிக்கொள்கிறேன் என்று வாக்கு சேகரித்தார்,
நிகழ்ச்சியில்
ஜெகதாள பேரூராட்சி செயலாளர் போளான் மகளிர் மாவட்ட அணி செயலாளர் உஷா மகளிர் அணி சாந்தா விஜயலட்சுமி கவுன்சிலர் ரவி பாஸ்கரன் கவுன்சிலர் வர்த்தக அணி முரளி ஒன்றிய இளைஞரணி செயலாளர் கொலக்கம்பை கண்ணன் ஒன்றிய பாசறை செயலாளர் மகேஷ் மாவட்ட இலக்கிய அணி கோட்டைகல் அதிகரட்டி பேரூராட்சி செயலாளருமான முன்னாள் கூட்டுறவு வங்கி தலைவர் முருகேசன் ஈஸ்வரன் ராஜேஷ் ஜனார்த்தனன் மகேஷ் ஒன்பதாவது வார்டு கவுன்சிலர் காயத்ரி கழக நிர்வாகிகள் தொண்டர்கள் அதிகரட்டி ஊர் பொதுமக்கள் கொல்லிமலை வனராஜ் ஒன்றிய செயலாளர் நாகராஜ் சார்பணிகள் மற்றும் அனைத்து நிர்வாகிகள் கலந்து எட்டாவது வார்டு உறுப்பினருமான அதிகரட்டி பேரூராட்சி செயலாளர்ஸ்ரீனிவாசன் அனைத்து கிளைக் கழக செயலாளர்கள் அனைத்து கிளைக் கழக சார்பணிகள் அனைத்து கூட்டணி கட்சிகள் மகளிர் அணி நாம் தமிழர் கட்சி தேமுதிக கட்சி தொண்டர்கள் நிர்வாகிகள் அனைவரும் கலந்து கொண்டார்கள், நிகழ்ச்சி முடிவில் வேட்பாளர் லோகேஷ் தமிழ் செல்வன் மற்றும் முன்னாள் குன்னூர் நகர மன்ற உறுப்பினர் சாந்தி ராமு, ஒன்றிய செயலாளர் பேரடி ராஜன்,பிரபல நடிகர் ரவி மரியா, பேரூராட்சி கவுன்சிலர்கள் கழக நிர்வாகிகள் பாராளுமன்ற வேட்பாளருடன் அருவங்காடு வியாபாரிகளிடம் கடை கடையாக சென்று வாக்கு சேகரித்து, தனியார் தேநீர் கடையில் வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன் மக்களுக்கு டீ போட்டுக் கொடுத்து வாக்கு சேகரிக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டார்,தொடர்ந்து பிரச்சார வாகனத்தில் குன்னூர் பாய்ஸ் கம்பெனி பகுதியில் பொதுமக்கள் கட்சித் தொண்டர்கள் மத்தியில் வாக்கு சேகரிப்பு செய்தனர், இதனைத் தொடர்ந்து குன்னூர் சேலாஸ் பகுதியிலும்
வாக்கு சேகரிப்பு செய்தனர், திரளான பொதுமக்கள் கழகத் தொண்டர்கள் பொதுமக்களிடம் ஒரு சில மணி நேரம் வேட்பாளர் லோகேஷ் தமிழ்செல்வன், முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஆ,சாந்தி ராமு, ரவி மரியா, பிரட்டி ஒன்றிய செயலாளர் ராஜா ,மற்றும் கழக நிர்வாகிகள்,சிறப்புரையாற்றி வாக்கு சேகரித்தனர், நடைபெற்ற அனைத்து தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியை முன்னால் சட்டமன்ற உறுப்பினர் ஆ சாந்தி ராமு மற்றும் கழக நிர்வாகிகள் தலைமையில் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தன,