கோவையில் 3 சக்கர மின்சார ரோந்து ஆட்டோ அறிமுகம் – தொடங்கி வைத்தார் போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன்.!!

கோவை மாநகர காவல் துறையில் ஏற்கனவே ‘பட்ரோல் ஜீப் ” ரோந்து வாகனம் செயல்பாட்டில் உள்ளது.தற்போது எலக்ட்ரிக் ஆட்டோ ரோந்து வாகனம் புதிதாக இன்று அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் தொடக்க விழா மாநகர காவல் ஆணையர் அலுவலக வளாகத்தில் இன்று காலை நடந்தது .போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் கொடியசைத்து தொடங்கி வைத்தார். பின்னர் அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது–கோவையில் ரோந்து பணிக்கு ” 3 சக்கர எலக்ட்ரிக் ஆட்டோ “என்ற ரோந்து வாகனம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இதற்கான .சி .எஸ் . ஆர். நிதியானது சிட்டி யூனியன் வங்கி, ஆனைமலை குழுமம் மற்றும் ஸ்ரீ மகாசக்தி ஆட்டோ ஏஜென்சிகளிடம் இருந்து பெறப்பட்டுள்ளது. மொத்தம் ரூ.30 லட்சம் செலவில் இது வாங்கப்பட்டுள்ளது.இதன் மூலம் ரோந்து பணியை திறம்பட செய்ய முடியும்..மிகவும் குறுகிய சாலைகளிலும் இந்த ஆட்டோவில் சென்று சட்ட ஒழுங்கு, குற்ற தடுப்பு பணியை திறம்பட செய்ய முடியும். இந்த மின்சார ரோந்து ஆட்டோ முதல் கட்டமாக 3 காவல் நிலையங்களுக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.மேலும் 2 எலெக்ட்ரிக் ஆட்டோக்கள் வாங்கப்பட உள்ளது. இதில் டிரைவர் உட்பட 6 பேர் பயணம் செய்யலாம். குற்ற தடுப்புக்காக பல்வேறு சிறப்பு சாதனங்கள் இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். இந்த நிகழ்ச்சியில் போலீஸ் துணை கமிஷனர்கள் சுகாசினி, சரவணகுமார், ஸ்ரீ மகா சக்தி ஆட்டோ ஏஜென்சி நிர்வாக இயக்குனர் டி.கே. தனசேகர், துணைத் தலைவர் ராம் பிரசாத் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.