வீட்டில் பணம் வைத்து சீட்டாட்டம் – 4 பேர் கைது..!

கோவை பி.என்.புதூரில் உள்ள பொம்ம நாயக்கர் வீதியில் ஒரு வீட்டில் பணம் வைத்து சீட்டு விளையாடுவதாக ஆர். எஸ். புரம் போலீசுக்கு நேற்று இரவு தகவல் வந்தது .சப் இன்ஸ்பெக்டர் முத்துக்குமார் அங்கு திடீர சோதனை நடத்தினார். அப்போது பணம் வைத்து சீட்டு விளையாடியதாக பி.என்.பதூர்,பாரதிதாசன் விதியைச் சேர்ந்த ரமேஷ் (வயது43) செல்வபுரம் எல்.ஐ.சி காலனி செல்வன் (வயது 55) வடவள்ளி காந்திநகர் சிவராஜ் (வயது32) சீரநாயக்கன்பாளையம் தங்கராஜ் (வயது46) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். சீட்டு விளையாட பயன்படுத்தப்பட்ட ரூ.15 ஆயிரத்து 200 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது.