கோடை கால கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்கிய எம்.எல்.ஏ

கோடை கால கிரிக்கெட் போட்டி: வெற்றி பெற்ற அணிக்கு கோப்பை வழங்கிய எம்.எல்.ஏ

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் தாலுகா பண்ணைக்காடு பேரூராட்சி அதன் சுற்றுவட்டார பகுதிகளான ஊத்து, மங்கலம் கொம்பு, தாண்டிக்குடி, பூளத்தூர், கும்பூர், போன்ற ஊர்களில் இருந்து கிரிக்கெட் விளையாட்டு போட்டிகள் 10 நாட்களாக நடைபெற்ற போட்டிகளில் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதில்
கிங்ஸ் லெவன் காலனி மங்களம்கொம்பு அணியினர் முதல் பரிசை தட்டிச் சென்றனர். இரண்டாவது பரிசை லோக்கல் கிரிக்கெட் கிளப் தாண்டிக்குடி அணியினர் வென்றனர். இந்த விளையாட்டுப் போட்டிகளை ஊத்து ஹார்ட் பிரேக் கிங்ஸ் அணி ஏற்பாடு செய்து இருந்தனர்.
மேலும் பங்கு பெற்ற அனைத்து அணிகளுக்கும் ஆறுதல் பரிசுகள் வழங்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பழனி சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில்குமார் முதல் பந்தை அடித்து போட்டிகளை துவக்கி வைத்தார். மேலும் வெற்றி பெற்ற அணிகளுக்கு கோப்பைகள், பதக்கங்கள், பரிசு பொருள்கள் மற்றும் சான்றிதழ்கள் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் விளையாட்டு வீரர்கள், பொதுமக்கள் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்