மின்சாரம் தாக்கி வடமாநில வாலிபர் பரிதாப பலி..

கோவை : ஜார்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் சுபாஷ் யாதவ் ( வயது 27) இவர் சரவணம்பட்டியில் உள்ள வாட்டர் பாட்டில் தயாரிப்பு நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.நேற்று இவர் வேலை செய்து கொண்டிருந்த போது திடீரென்று மின்சாரம் தாக்கி தூக்கி வீசப்பட்டார். சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனைக்கு எடுத்துச் சென்றனர். வழியில் அவர் இறந்து விட்டார். இது குறித்து சரவணம்பட்டி போலீசில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.