கல்லூரி மாணவர்களுக்கு சிகரெட்டில் கஞ்சா வைத்து விற்ற வடமாநில தொழிலாளி கைது..!

கோவை : பெரியநாயக்கன்பாளையம் மதுவிலக்கு அமல் பிரிவு போலீஸ் சப் இன்ஸ்பெக்டர் ராஜேஷ் கண்ணா நேற்று கோவில்பாளையம்- சக்தி ரோட்டில் ரோந்து சுற்றி வந்தார். அப்போது அங்கு சந்தேகப்படும்படி நின்று கொண்டிருந்த ஒருவரை பிடித்து சோதனை செய்தார். அவரிடம் 10 கிலோ 200 கிராம் கஞ்சா இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதை யடுத்து அவர் கைது செய்யப்பட்டார். விசாரணையில் அவர் ஒடிசாவை சேர்ந்த ராகில் நாயக் ( வயது 33 )என்பது தெரியவந்தது . இவர் கோவில்பாளையம் பகுதியில் தங்கியிருந்து கட்டிட வேலை செய்து வந்தார்.. இவர் வடமாநிலத்தில் இருந்து கஞ்சா கடத்தி வந்து அதை சிகரெட்டில் அடைத்து அந்த பகுதியில் உள்ள கல்லூரி மாணவர்களுக்கு விற்பனை செய்து வந்தது விசாரணையில் தெரியவந்தது..இவர் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.