கோவை கவுண்டம்பாளையம் மீனாட்சி நகர் சேர்ந்தவர் சண்முகம். இவரது மனைவி சின்ன பொண்ணு என்ற சுமதி ( வயது 35) இவர்களுக்கு நிவேதா ( வயது 10)மணிமேகலை (வயது 9) என்றமகள்களும் பரத் வேல்( வயது 5) என்ற மகனும்உள்ளனர்.சண்முகம் குடிப்பழக்கம் உடையவர். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது இந்த நிலையில் சின்னப்பொண்ணு என்ற சுமதி தனது 3 குழந்தைகளுடன் கடந்த 16ஆம் தேதி வீட்டில் இருந்து திடீரென்று மாயமாகிவிட்டார் .இது குறித்து கணவர் சண்முகம் துடியலூர் போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.
Leave a Reply