அதிகாலையிலே கோவை டாஸ்மாக் பாரில் மது விற்பனை – 2 ஊழியர்கள் கைது..!

கோவை பீளமேடு போலீஸ் இன்ஸ்பெக்டர் கந்தசாமி, சப் இன்ஸ்பெக்டர் மீனாட்சி சுந்தரம் ஆகியோர் நேற்று அதிகாலையில் விளாங்குறிச்சி ரோட்டில் உள்ள டாஸ்மாக் பாரில் ( கடை எண் 1809) திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது குறிப்பிட்ட நேரத்துக்கு மாறாக அதிகாலையில் மது விற்றது கண்டுபிடிக்கப்பட்டது. இது தொடர்பாக பார் ஊழியர்கள் சிவகங்கை மாவட்டம் தேவகோட்டையை சேர்ந்த பாரதி ( வயது 28) புதுக்கோட்டை மாவட்டம், பள்ளிவயலை சேர்ந்த பிரவீன் (வயது 22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர். 29 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர்.