சந்தன மரம் வெட்டி கடத்தல் : ஒருவர் கைது – 3 பேர் தப்பி ஓட்டம்..!

கோவை சுந்தராபுரம் போலீசார் கணேசபுரம் பகுதியில் நேற்று அதிகாலையில் ரோந்து சுற்றி வந்தனர். அப்போது அந்த வழியாக சந்தேக படும்படி மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரை தடுத்து நிறுத்தினர். ஆனால் அவர்கள் மோட்டார் சைக்கிளை நிறுத்தாமல் வேகமாக ஓட்டிச் சென்றனர். அவர்களை போலீசார் துரத்திச் சென்றனர். அப்போது எல்.ஐ.சி. காலனியில் வைத்து ஒருவரை மடக்கிப்பிடித்தனர். மற்ற 3 பேர் தப்பி ஓடி விட்டனர் விசாரணையில் பிடிபட்ட நபர் பேரூர், செட்டிபாளையத்தை சேர்ந்த முனியன் ( வயது 22) என்பதும் போத்தனூர் செட்டிபாளையம் பெரிய குயிலி பகுதியில் ஒரு சந்தன மரத்தை வெட்டி 4 கட்டைகளை மோட்டார் சைக்கிளில் மறைத்து கடத்திச் சென்றதும் தெரிய வந்தது. முனியனை போலீசார் கைது செய்தனர். மற்றும் 3 பேரை தேடி வருகிறார்கள்.