கோவையில் ஆடு, மாடுகளை வேட்டையாடும் சிறுத்தை: பாதுகாக்க வேண்டும் – கிராமவாசிகள் 

கோவையில் ஆடு, மாடுகளை வேட்டையாடும் சிறுத்தை: பாதுகாக்க வேண்டும் – கிராமவாசிகள் 

கோவை சிறுவாணி சாலை, ஆலந்துறை அடுத்த நல்லூர்வயல் பகுதி நல்லூர்பதி கிராமத்தில் சுமார் 300க்கும் மேற்பட்ட கிராமவாசிகள் மற்றும் பழங்குடியினர் குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அப்பகுதியிலுள்ள தனியார் விவசாய நிலங்களில் கூலி வேலை செய்வதுடன், அரசு வழங்கிய கரவை மாடு மற்றும் ஆடுகளை வளர்ப்பதும் ஆடு, மாடுகளை மேய்ச்சலில் விடுவதை தொழிலாக கொண்டுள்ளனர். இன்னிலையில் கடந்த ஆறு மாதங்களாக அக்கிராம மக்கள் வளர்த்து வரும் ஆடு மற்றும் மாடுகள் காணாமல் போவதும், அடிக்கடி ரத்த காயங்களுடனும் அவை காணப்பட்டதையடுத்து சந்தேகமடைந்த கிராம வாசிகளுக்கு மேய்ச்சலின் போது அப்பகுதியில் சிறுத்தை ஒன்று நடமாடுவதையும், அது ஆடு, மாடுகளை அடிப்பதும் தெரியவந்தது. கடந்த 6 மாதத்தில் மட்டும் சுமார் 20க்கும் மேற்பட்ட ஆடு மாடுகளை அச்சிறுத்தை கொன்றுள்ள நிலையில் நேற்று மாலை வனப்பகுதியை ஒட்டிய பட்டா நிலத்தில் மேய்ந்துகொண்டிருந்த பசுமாட்டினை தாக்கிய சத்தம் கேட்டு அங்கு சென்ற கிராம வாசிகள் சிறுத்தையை விரட்டியுள்ளனர். இதையடுத்து வனத்துறைக்கு தகவல் கொடுக்கபட்டு வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரனை நடத்தியதுடன் தாக்கியது மர்ம விலங்கு என தெரிவித்துள்ளனர். நேரில் பார்த்த கிராம வாசிகள் ஆடு மாடுகளை சிறுத்தை தாக்கி கொன்றதாக எடுத்த கூறியும் வனத்துறையினர் சிறுத்தை தாக்கிய இடங்களில் அதன் கால் தடத்தை காட்ட கூறுவதாகவும் தெரிவித்த கிராமவாசிகள் வனத்துறையினர் ஆடு மாடுகளை தாக்கியது மர்ம விலங்கு என்று கூறுவதாக குற்றம் சாட்டினர். பூர்வீகமாக குடும்பத்துடன் வசித்து வரும் தங்களை பாதுகாக்க வனத்துறையும், தமிழக அரசு உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுத்தனர். மேலும் தங்களது வாழ்வாதாரமாக இருக்கும் ஆடு மாடுகளை அடித்து கொல்லும் சிறுத்தை மனிதர்களை தாக்கும் முன்னர் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்றும், ஆடு மாடுகளை இழந்தவர்களுக்கு அதற்குரிய இழப்பீடு வழங்க வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்தனர். மேலும் காருன்யா கல்வி நிறுவனம் யானை வழித்தடங்களை மறித்து 8 அடிக்கு கான்கிரீட் சுவர் அமைத்திருப்பதாகவும் அதனாலேயே வன விலங்குகள் கிராமம் மற்றும் தோப்பிற்குள் வருவதாகவும் குற்றம் சாட்டினர். வன விலங்குகள் ஊருக்குள் வருவதற்கு மேய்ச்சலின் போது யானை, காட்டு பன்றிகள் போன்ற வன விலங்குகள் காண நேரிட்டால் தப்பித்துகொள்ளலாம் ஆனால் சிறுத்தை பதுங்கி இருந்து தாக்குவதாவவும் வேதனை தெரிவித்தனர்.