இருகூரில் கேரள லாட்டரி சீட்டு விற்ற வியாபாரி கைது..!

கோவை சிங்காநல்லூர் அருகே உள்ள இருகூர் பஜனை கோவில் விதியைச் சேர்ந்தவர் கந்தசாமி ( வயது 51) இவர் இருகூர் தேவர் சிலை அருகே பெட்டிக்கடை வைத்துள்ளார் .இவரது கடையில் சிங்காநல்லூர் போலீசார் நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கு தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகள் மறைத்து வைக்கப்பட்டிருப்பது கண்டுபிடிக்கப்பட்டது .இது தொடர்பாக வியாபாரி கந்தசாமி கைது செய்யப்பட்டார்.அங்கிருந்த 109 லாட்டரி டிக்கெட் ,பணம் ரூ.1800 பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணை நடந்து வருகிறது. கைது செய்யப்பட்ட கந்தசாமி நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.