நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாஜக வேட்பாளராக எல்.முருகன் வேட்பு மனு தாக்கல்.!!

நீலகிரி மாவட்டம் நாடாளுமன்ற தேர்தல் அறிவிக்கப்பட்ட நிலையில் தமிழ்நாடு ஒரே கட்டமாக வரும் ஏப்ரல் 19ஆம் தேதி வாக்கு பதிவு நடைபெற உள்ள நிலையில்
நீலகிரி நாடாளுமன்ற தொகுதியில் பாரதிய ஜனதா கட்சி சார்பில் போட்டியிடும் மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் உதகையில் உள்ள, மாரியம்மன் கோவிலுக்கு வருகை புரிந்தனர். அவர்களை வரவேற்கும் விதமாக நீலகிரி பாஜக மாவட்டத் தலைவர் தலைமையில் சிறப்பு வரவேற்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன,
நீலகிரி பாஜக மகளிர் அணி மற்றும் மாவட்ட நிர்வாகிகளின் முக்கிய தலைவர்கள் பொன்னாடை பூச்செண்டு கொடுத்து வரவேற்றனர்.
மாவட்டத் தலைவர் மோகன்ராஜ் மாலை அணிவித்து வாழ்த்து தெரிவித்தார் மற்றும் கூட்டணி பாட்டாளி மக்கள் கட்சியின் சார்பாக பாஜக வேட்பாளர் எல் முருகன் மாவட்ட செயலாளர் குணசேகரன் பொன்னாடை அணிவித்து வரவேற்றார். வருகை புரிந்த பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை  பாட்டாளி மக்கள் கட்சி மாவட்ட அமைப்பு செயலாளர் ஜான் லியோ பொன்னாடை அணிவித்து வரவேற்றார். உடன் மாவட்ட தலைவர் அம்சா, உதவி நகர செயலாளர் சதீஷ் உடனிருந்து வரவேற்றனர். தொடர்ந்து மாவட்ட பாஜக தலைவர் மோகன்ராஜ் பாஜக வேட்பாளர் எல் முருகன் மற்றும் மாநிலத் தலைவர் அண்ணாமலை ஆகியோரை கோவிலுக்கு அழைத்துச் சென்று சிறப்பு வழிபாடு நிகழ்ச்சியில் பங்கேற்றார்கள். வழிநடக்க பாஜகவினர் மற்றும் பொதுமக்கள் உற்சாக வரவேற்பு தந்தனர்.
இதனைத் தொடர்ந்து உதகை காபி ஹவுஸ் சதுக்கத்திலிருந்து வாகனம் மூலம் எல்.முருகன் மற்றும் அண்ணாமலை ஆகியோர் பிரம்மாண்ட பேரணியாக காப்பியோஸ் கமர்சியல் சாலை, பிரிக்ஸ் பள்ளி காலை, கார்னேஷன் சாலை வழியாக சென்று மாவட்ட ஆட்சித் தலைவர் மற்றும் மாவட்ட தேர்தல் அதிகாரியுமான மு. அருணாவிடம் வேட்புமனு தாக்கல் செய்தனர். உடன் மாநில தலைவர் அண்ணாமலை, நீலகிரி மாவட்ட தலைவர் மோகன்ராஜ், பாஜக போஜராஜ், மூத்த பாஜக பிரமுகர்கள் உடன் இருந்தனர். முன்னதாக காலை கோத்தகிரி அருகே உள்ள படுகர் இன மக்களின் குலதெய்வமான பேரகணி ஹெத்தை அம்மன் மற்றும் சக்தி மலை முருகன் கோவிலில் காணிக்கை செலுத்தி பிராத்தித்தார்.
நடைபெற்ற வேட்பு மனு தாக்கல் ஊர்வலத்தில் பாஜக இளைஞர் அணியினர், மகளிர் அணியினர், பாஜக மாவட்ட பொறுப்பாளர்கள், ஒன்றிய பொறுப்பாளர்கள், நகர பொறுப்பாளர்கள் மற்றும் கிளை பொறுப்பாளர்கள், என உதகை கூடலூர் கோத்தகிரி குன்னூர் போன்ற பகுதியில் இருந்து பாஜகவினர் திரளாக கலந்து கொண்டனர். கூட்டணிக் கட்சியான ஜான் பாண்டியன் கட்சியின் நீலகிரி மாவட்ட தலைவர் சிவா தலைமையில் கட்சி நிர்வாகிகள் உறுப்பினர்கள் தொண்டர்கள் என திரளாக கலந்து கொண்டு உற்சாக வரவேற்பளித்தனர்.பாட்டாளி மக்கள் கட்சியின் மாவட்டத் தலைவர் அம்சா தலைமையில் மாவட்ட செயலாளர் குணசேகரன், மாவட்ட அமைப்பு செயலாளர் ஜான் லியோ, உதகை நகர செயலாளர் சதீஷ், மாவட்டம் , நகரம், கிளை, ஒன்றிய பொறுப்பாளர்கள், கழக நிர்வாகிகள் உறுப்பினர்கள் என திரளாக கலந்து கொண்டு கூட்டணி கட்சியான பாஜகவை ஆதரித்து ஊர்வலத்தில் தங்களது ஆதரவை தெரிவித்தனர். தாமாக கட்சியினர் 200க்கும் மேற்பட்டவர்கள் தங்களது ஆதரவை பாஜக ஊர்வலத்தில் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
நடைபெற்ற வேட்பு மனு தாக்கல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு நிறைவாக உதகை கார்நேஷன் சாலையில் சிறிது நேரம் தொண்டர்களோடு சிறப்புரையாற்றி பகிர்ந்து கொண்டார் மாநில தலைவர் அண்ணாமலை. மற்றும் பாஜக வேட்பாளர் எல் முருகன் உடன் பாட்டாளி மக்கள் கட்சியினர், ஜான் பாண்டியன் பாமக போன்ற கூட்டணிக் கட்சியினர் கட்சியினர் தங்களது ஆதரவை உற்சாகத்துடன் தெரிவித்தனர். நிறைவாக செய்தியாளர்களுக்கு மாநிலத் தலைவர் அண்ணாமலை பேட்டியளித்தபோது, நீலகிரி மாவட்டத்திற்கு ஒரு சரித்திர வேட்பாளர் ராஜ சபாவிற்கு நியமனம் செய்யப்பட்டு ஒரு மாதத்திற்குள் ஆகவே மீண்டும் நீலகிரி மாவட்ட வேட்பாளராக நியமிக்கப்பட்டிருப்பது பிரதமர் மோடி மற்றும் மூத்த தலைவர்கள் மனதில் நீலகிரி மாவட்டத்தை வளர்ச்சி பாதையில் எடுத்துச் செல்ல வேண்டும் என்பதை தெளிவாக உணர்ந்து பிரதமர் மோடி அவர்கள் விருப்பம் நீலகிரி மாவட்ட வேட்பாளராக எல் முருகன் அவர்கள் பேட்டியிட வேண்டும் என்றார். திமுக வேட்பாளர் ராசாவிடம் போட்டியிட்டு சண்டை போட வரவில்லை . மாறாக நீலகிரி மாவட்டத்தை காப்பாற்ற வந்துள்ளார் என்றார். நீலகிரி மக்களிடையே இருக்கும் தேயிலை பிரச்சினைகளுக்கு தீர்வு காணப்படும் என்றார். பாரத பிரதமர் மோடி அவர்களை தேர்தல் பிரச்சாரமாகவோ தேர்தலுக்குப் பிறகு நிச்சயமாக ஊட்டிக்கு பாஜகவின் முக்கிய பிரமுகர்களை வரவழைக்க நாங்கள் முயற்சி மேற்கொண்டு வருகிறோம். தொடர்ந்து வேட்பாளர் எல் முருகன் செய்தியாளர்களோடு பேசியதாவது நீலகிரி உதகை ஒரு தொழில் வளர்ச்சி அடைந்த பகுதியாக வர வேண்டும் ஏனெனில் இப்பகுதியில் இருந்து ஏராளமான இளைஞர்கள் பெண்கள் ஆண்கள் என சென்னை கோவை ஹைதராபாத் பெங்களூர் போன்ற இடங்களுக்கு வேலைக்காக செல்கின்றனர் .இதனை நினைவு கொண்டு நீலகிரி உதகையில் ஐடி பாயிண்ட் கொண்டு வருவதற்கான தீர்மானங்களை நிச்சயமாக செய்வோம் என்று உறுதி அளித்தார். நடைபெறும் தேர்தலில் மக்கள் தெளிவாக வாக்களிக்க வேண்டும் என்று கூறி விடை பெற்றார்..