தடை செய்யப்பட்ட கேரள லாட்டரி டிக்கெட் விற்பனை – 5 பேர் கைது.!!

கோவை மாவட்டம் பொள்ளாச்சி கோபாலபுரம், சோதனை சாவடி அருகே தடை செய்யப்பட்ட கேரள மாநில லாட்டரி டிக்கெட்டுகள் விற்பனை செய்யப்படுவதாக பொள்ளாச்சி தாலுகா போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து போலீசார் அங்கு நேற்று திடீர் சோதனை நடத்தினார்கள். அப்போது லாட்டரி டிக்கெட் விற்றதாக திருப்பூர் மாவட்டம் தாராபுரம் ,கருங்கல் வலசை சேர்ந்த கோபி ( வயது 37) கைது செய்யப்பட்டார் . 30 லாட்டரி டிக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. வாளையார் சோதனை சாவடி அருகே கேரள மாநில லாட்டரி டிக்கெட் விற்றதாக திருப்பூர் ஈஸ்வரன் மூர்த்தி நகரை சேர்ந்த ரமேஷ் பாபு (வயது 45) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 15 லாட்டரி டிக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. பொள்ளாச்சி கோபாலபுரம் செக்போஸ்ட் அருகே லாட்டரி டிக்கெட் விற்றதாக சூலக்கல் கிருஷ்ணசாமி ( வயது 61 ) கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 31 லாட்டரி டிக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. அதே பகுதியில் நடந்த சோதனையில் பொள்ளாச்சி திப்பம்பட்டி, கொள்ளுபாளையத்தைச் சேர்ந்த முத்துராமன் ( வயது54) கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 25 லாட்டரி டிக்கெட் கைப்பற்றப்பட்டது. அங்குள்ள மற்றொரு இடத்தில் நடந்த சோதனையில் கரூர் கிருஷ்ணராயபுரத்தைச் சேர்ந்த வெங்கடேஷ் (வயது 48 )என்பவர் கைது செய்யப்பட்டார். இவரிடமிருந்து 173 கேரள மாநில லாட்டரி டிக்கெட் பறிமுதல் செய்யப்பட்டது. தொடர்ந்து சோதனை நடந்து வருகிறது.