கோவையில் நாய்களை தாக்கி கொன்றது சிறுத்தையா ?: மலை அடிவாரத்தில் சிறுத்தை படுத்து உறங்கும் செல்போன் காட்சிகள் வைரல் – பொதுமக்கள் பீதி…

கோவையில் நாய்களை தாக்கி கொன்றது சிறுத்தையா ?: மலை அடிவாரத்தில் சிறுத்தை படுத்து உறங்கும் செல்போன் காட்சிகள் வைரல் – பொதுமக்கள் பீதி…

கோவை கணுவாய் அருகே உள்ள மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் சிறுத்தை மற்றும் கருஞ் சிறுத்தைகள் உள்ளன. இவைகள் அவ்வப் போது விவசாயத் தோட்டங்களில் புகுந்து அங்கிருக்கும் ஆடு மற்றும் நாய்கள் அடித்து கொன்று எடுத்துச் செல்கின்றன.

இந்த நிலையில் கோவை தடாகம் அருகே காளையனூர் வாட்டர் கம்பெனி பகுதியில் இரவு புகுந்த சிறுத்தை நாய்களை தாக்கிக் கொன்று உள்ளதாக அப்பகுதி மக்கள் அச்சம் அடைந்துள்ளது.

மேலும் கடந்த 2 நாட்களுக்கு முன் அங்கு விஜயன் மற்றும் சுந்தர்ராஜ் தோட்டத்தில் கட்டியிருந்த ஆடுகளை கொன்றதாக கூறுகின்றனர்.

இதையடுத்து அங்கு வந்த கோவை வனத் துறையினர் அங்கு பதிந்திருந்த சிறுத்தையின் காலடித் தடங்களை பதிவு எடுத்துச் சென்றதுடன். அப்பகுதியில் கண்காணிப்பு கேமராவை பொருத்திச் சென்றனர். மனிதர்களைத் தாக்கும் முன் சிறுத்தைகளை பிடிக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் அங்குள்ள வனப் பகுதியில் சிறுத்தை புலி படுத்து உறங்கும் செல்போன் காட்சிகள் வைரலாகி வருகிறது.