ஸ்கூட்டர் மீது கார் மோதி வாலிபர் பரிதாப பலி – மாணவர் படுகாயம்..

கோவை அம்மன் குளம், ஜி.எச். காலனி சேர்ந்தவர் உன்னிகிருஷ்ணன், இவரது மகன் கார்த்திக் ( வயது 28 ) இவர் கடலூர் மாவட்டம் விருதாச்சலத்தைச் சேர்ந்த மாணவர் முகமது ரியாஸ் ( வயது 22) என்பவருடன் ஸ்கூட்டரில் கோவை அவிநாசி ரோட்டில் சென்று கொண்டிருந்தார் .ஸ்கூட்டரை கார்த்திக் ஓட்டினார்..லட்சுமி மில் சந்திப்பில் சென்ற போது அந்த வழியாக வேகமாக வந்த ஒரு கார் அவர்கள் சென்ற ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் இருவரும் படுகாயம் அடைந்தனர். சிகிச்சைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியில் கார்த்திக் இறந்தார். முகமது ரியாஸ் சிகிச்சை பெற்று வருகிறார். இது குறித்து கோவை கிழக்கு பகுதி போக்குவரத்து புலனாய்வு போலீசில் புகார் செய்யப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினார்கள். மாயமான காரை தேடி வருகிறார்கள்.