கோவையில் மாணவிகள் 2 பேர் எங்கோ மாயம்..!

கோவை அருகே உள்ள  வடவள்ளியை சேர்ந்த காளிதாஸ். இவரது மகள் கீர்த்தனா (வயது 17 )பிளஸ் 2 படித்துவிட்டு கல்லூரியில் சேருவதற்கு இருந்தார். இதற்காக நேற்று முன் தினம் கோவை அரசு கலைக் கல்லூரியில் அப்ளிகேஷன் வாங்க சென்றவர் வீடு திரும்பவில்லை .எங்கோ மாயமாகிவிட்டார். இது குறித்து இவரது தந்தை காளிதாஸ் வடவள்ளி போலீசில் புகார் செய்துள்ளார் .

இதேபோல வடவள்ளி பக்கம் உள்ள காளப்பநாயக்கன்பாளையத்தை சேர்ந்தவர் கணேசன். இவரது மகள் சுவேதா ( வயது 16) பிளஸ் 2 படித்து வருகிறார். நேற்று முன் தினம் இவர் வீட்டிலிருந்து திடீரென்று மாயமாகிவிட்டார். இதுகுறித்து தாயார் பாரதி வடவள்ளி போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் வழக்கு பதிவு தேடி வருகிறார்கள்.