எனக்கும் அதுக்கும் எந்த தொடர்பும் இல்லை – ஜான் பாண்டியன்

ஜெம் வீரமணி விவ​காரத்​துக்​கும், எனக்​கும் எவ்​வித தொடர்பும் இல்​லை. எனது பெயரை கெடுக்க வேண்​டும் என்ற நோக்​கத்​தில் பொய்யை பரப்​பு​கிறார்​கள் என்று, தமிழக மக்​கள் முன்​னேற்​றக் கழக நிறுவன தலை​வர் பெ.ஜான்​பாண்​டியன் தெரி​வித்​தார்.

சென்​னை​யில் சிறுமிகளை பாலியல் வன்​கொடுமை செய்த விவ​காரத்​தில், ஜெம் கிரானைட் அதிபர் வீரமணி, போக்சோ சட்​டத்​தின்​கீழ் கைது செய்​யப்​பட்​டுள்​ளார். இதுதொடர்​பாக, சாந்தி என்ற பெண் உட்பட மொத்​தம் 4 பேர் இவ்​வழக்​கில் கைது செய்​யப்​பட்​டுள்​ளனர் இந்த விவ​காரம் தொடர்​பாக ஜான்​பாண்​டியன் கூறிய​தாவது: வீரமணி சம்​பவத்​துக்​கும், எனக்​கும் எந்​த​வித தொடர்​பும் இல்​லை. தொழில​திபர் என்ற முறை​யிலேயே வீரமணியை எனக்கு தெரி​யும். இந்த வழக்​கில் யூடியூபர்​கள் பலர் தேவை​யின்றி எனது பெயருக்கு களங்​கம் கற்​பிக்​கும் வகை​யில், பணம் சம்​பா​திக்​கும் நோக்​கத்​தில் கருத்​துகளை பரப்​பு​கிறார்​கள்.

காங்​கிரஸ் பிர​முகர் ரஞ்​சன்​கு​மார், ஒரு பிரபல அரசி​யல் தலை​வர் மூல​மாக என்னை வந்து சந்​தித்​தார். குடும்ப பிரச்​சினை எனக்​கூறி, சாந்தி என்ற பெண்​ணை, ஒரு​நாள் சென்னை தாஜ் ஓட்​டலுக்கு அழைத்து வந்​தார். குடும்ப பிரச்​சினை என்​றும், வீரமணி​யிடம் பணம் நிறைய இருப்​ப​தாக​வும், ரூ. 20 கோடியை அவரிடம் வாங்கி கொடுங்​கள் என்​றும், இவர்​கள் இரு​வரும் தெரி​வித்​தனர். அதற்கு நான் உடன்​பட​வில்​லை. அத்​தோடு அவர்​களு​ட​னான சந்​திப்பு முடிந்​து​விட்​டது. தற்​போது எனது பெயரை ஏன் இழுக்​கிறார்​கள் என தெரிய​வில்​லை. நான் மிரட்​டினேன் என கூறும் ரஞ்​சன் குமார், அப்​போதே காவல் நிலை​யத்​தில் ஏன் புகார் அளிக்​க​வில்​லை? ரஞ்​சன் குமாரும், சாந்​தி​யும்​தான் பணம் பறிக்க நினைத்​தவர்​கள்.எனது பெயரை கெடுக்க வேண்​டும் என்ற எண்​ணத்​தில் இது போன்ற நடவடிக்​கை​களில் சிலர் ஈடு​பட்டு வரு​கிறார்​கள். இது தொடர்​பாக எங்​கள் கட்சி நிர்​வாகி​கள் மாநிலம் முழு​வதும் சைபர் கிரைம் போலீ​ஸிடம் தொடர்ந்து புகார் அளித்து வரு​கிறார்கள். போலீ​ஸார் உரிய நடவ டிக்கை எடுப்​பார்​கள் என நம்பு​கிறேன். சிறு குழந்​தைகள் மீதான பாலியல் வன்​கொடுமை கடும் குற்​றச் செயல். அதன் மீது தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்​டும் என தெரி​வித்​தார். இதனிடையே, ஜான் பாண்டியன் பெயருக்கு களங்கம் ஏற்படுத்தும் நோக்கில் சமூக வலை தளங்களில் அவதுாறு பரப்புபவர் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி தமிழக மக்​கள் முன்​னேற்​றக் கழக திருநெல்​வேலி மாவட்​டச் செயலர் கண்​மணி மாவீரன், மாவட்ட காவல் கண்​காணிப்​பாளரிடம் மனு அளித்துள்ளார்.