சிறுத்தையிடமிருந்து மகனை காப்பாற்றிய தாய்

கோவை மாவட்டம் வால்பாறை அருகே உள்ள அப்பர்பாரளை எஸ்டேட்டில் மேல் டிவிசன் பகுதியில் குடியிருந்து பணி செய்து வருபவர் குருசாமி அருள் ஜோதி தம்பதியினர் இவர்களின் 5 வயது மகன் திக்ஷிதன் அப்பகுதியிலுள்ள பள்ளியில் ஒன்றாம் வகுப்பு படித்து வருகிறார் இந்நிலையில் இன்று பள்ளிப்படிப்பை முடித்து வீட்டிற்கு வந்தவுடன் தாய் அருள்ஜோதி வீட்டு வாசலின் முன்பு தனது மகனை மடியில் வைத்திருந்த பொழுது அப்பகுதி அருகே மறைந்திருந்த சிறுத்தை ஒன்று திடீரென பாய்ந்து சிறுவனை தாக்கி இழுத்துள்ளது இச்சம்பவத்தால் அதிர்ச்சி அடைந்த தாய் தனது குழந்தையை இறுக பிடித்துக்கொண்டே காப்பாத்துங்க காப்பாத்துங்க என்று அலறி சத்தம் போட்டுள்ளார் அப்போது அருகே குடியிருந்தவர் சத்தம் போட்டு குச்சியுடன் ஓடிவந்தவுடன் சிறுத்தை சிறுவனை விட்டுவிட்டு அங்கிருந்து ஓடிச்சென்றுள்ளது சிறுத்தை தாக்கியதில் வலது காதுப்பகுதி மற்றும் பின் தலையில் காயமடைந்த சிறுவனை எஸ்டேட் ஆம்புலன்சில் வால்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று அங்கு சிறுவனுக்கு முதலுதவி சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக அதே ஆம்புலன்சில் கோவையிலுள்ள தனியா மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் . இச்சம்பவம் பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் சிறுவனை தாக்கிய சிறுத்தையை கூண்டு வைத்து பிடிக்க அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்