கோவை மாவட்டம் வால்பாறை மார்க்கெட் பகுதியில் சுமார் 300 க்கும் மேற்பட்ட நகராட்சி வாடகைக் கடைகள் உள்ளன இவற்றில் நகராட்சிக்கு செலுத்த வேண்டிய வாடகை பாக்கிகளை துரிதமாக வசூல் செய்ய உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி மாவட்ட ஆட்சித்தலைவர் உத்தரவிட்டுள்ள நிலையில் நகராட்சி நிர்வாக இயக்குநர் தட்சிணாமூர்த்தி ஆலோசனைக்கு இணங்க வால்பாறை நகராட்சி ஆணையாளர் வெங்கட லட்சுமணன் அறிவுறுத்தலின் படி நகராட்சி உதவி அலுவலர் சங்கரநாராயணன் தலைமையில் இன்று சுமார் ஐந்து கடைகளுகளை பூட்டி சீல் வைத்து அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இந்த சீல் வைத்த கடைகளில் ஒரு ஆண்டு, எட்டு மாதம் மற்றும் ஆறு மாதங்கள் வாடகை செலுத்தத் தவறிய கடைகள் என தெரிய வருகிறது .இந்நிலையில் ஏற்க்கனவே சுமார் பத்து கடைகள் சீல்வைக்கட்டு அதில் பெரும்பாலான கடைகளுக்கு வாடகை நிலுவைத்தொகை வசூல் செய்து பின்னர் சீல் அகற்றியுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர் .இந்த நடவடிக்கையில் நகராட்சி இளநிலை உதவியாளர் தினேஷ் மற்றும் இரண்டு உதவியாளர்கள் ஈடுபட்டனர்
நகராட்சி வாடகை கடைகளுக்கு பூட்டி சீல்







