சபரிமலையில் பக்தர்களின் வசதிக்காகவும், கோயில் நிகழ்வுகளை எளிதில் அறியும் வகையிலும் புதிய இணையதளத்தை கோயில் நிர்வாகம் தொடங்கியுள்ளது.
சபரிமலையில் வருகிற 16-ஆம் தேதி கோயில் நடைத்திறக்கப்பட உள்ள நிலையில்,17-ஆம் தேதிமுதல் மகரவிளக்கு சீசன் தொடங்குகிறது. இதனையடுத்து சபரிமலை சீசனின் முக்கிய நிகழ்வுகளான மண்டல பூஜை டிசம்பர் 27-ஆம் தேதியும், மகர விளக்கு பூஜை ஜனவரி 14-ஆம் தேதியும் நடைபெற உள்ளது. சபரிமலை யாத்திரை செல்லும் பக்தர்கள் தங்களுக்குத் தேவையான அனைத்து அத்தியாவசியத் தகவல்களையும் பெறும் வகையில் புது இணையதளத்தை ஆலய நிர்வாகம் அறிமுகப்படுத்தியுள்ளது.
sabariportaldcpta.in என்ற புதிய இணையதளம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ள நிலையில் இதன்மூலம் கோயில் நிகழ்வுகளை அறியவும், தரிசனத்துக்கான முன்பதிவுகளை மேற்கொள்ளவும், ரயில் மற்றும் பேருந்து சேவைகளை அறியவும், பொருட்கள் திருட்டு மற்றும் காணாமல் போனவர்கள் குறித்து புகாரளிக்கவும் முடியுமென ஆலய நிர்வாகம் அறிவித்துள்ளது. மேலும், இப்புதிய இணையதளத்தில் வாட்ஸ் ஆப் சார்ட் போர்டு வசதியும் உள்ளது. மண்டல மற்றும் மகரவிளக்கு பூஜைக்கு கேரள அரசு, தேவசம் போர்டு இணைந்து பல்வேறு ஏற்பாடுகளையும் செய்து வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.









