ஆளுநர் ஆட்டிப்படைக்கும் வகையில் புதுச்சேரியில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது என முதல்வர் விமர்சனம்.
தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் புதுவையில், எஸ்.பி. சிவக்குமார் இல்லத் திருமண விழாவில் கலந்துகொண்டு சிறப்புரையாற்றி வருகிறார்.
அப்போது பேசிய அவர், தமிழ்நாட்டை போல புதுச்சேரிக்கும் திராவிட மாடல் ஆட்சி தேவைப்படுகிறது. புதுச்சேரியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் ஆட்சி நிச்சயமாக அமையும். தமிழ்நாட்டையும் புதுச்சேரியையும் யாரும் பிரித்துப் பார்க்க முடியாது. கலைஞர் கொள்கை உரம் பெற்ற ஊர் புதுச்சேரி.
புதுச்சேரி மீது எனக்கு தனி பாசம் உண்டு. புதுச்சேரிக்கும், திராவிட இயக்கத்திற்கும் நேரடி தொடர்பு உண்டு என தெரிவித்துள்ளார். மேலும் திராவிட இலக்கியத்தின் தலைநகரம் என புதுச்சேரியை கூறலாம்.
புதுச்சேரியில் தற்போது நடைபெறும் ஆட்சி மக்களுக்கான ஆட்சி இல்லை. ஆளுநர் ஆட்டிப்படைக்கும் வகையில் புதுச்சேரியில் ஒரு ஆட்சி நடந்து கொண்டிருக்கிறது. கட்சிக்குள் போட்டி இருக்க வேண்டும் பொறாமை இருக்கக் கூடாது. நான் சொல்வதை அப்படியே பின்பற்றக்கூடிய தொண்டர்கள் தான் இயக்கத்தில் உள்ளனர் என்றும் தெரிவித்துள்ளார்.
Leave a Reply