கோவை கலெக்டர் அலுவலகத்தில் கணவன் – மனைவிதீக்குளித்து தற்கொலை முயற்சி.

கோவை; மார்ச் 5. கோவை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று நடந்தது. மாவட்ட கலெக்டர் கிராந்தி குமார் தலைமை தாங்கினார். மாவட்டம் வருவாய் துறை அதிகாரி ஷர்மிளா முன்னிலை வகித்தார். இந்த முகாமில் பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக மொத்தம் 507 கோரிக்கை மனுக்கள் கலெக்டரிடம் வழங்கப்பட்டது. அப்போது அங்கு 30 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் தனது மனைவியுடன் மனு கொடுக்க வந்தார் .அவர் திடீரென்று தான் கொண்டு வந்த டீசலை தனது உடலிலும், தனது மனைவியின் உடலிலும் ஊற்றி தீக்குளிக்க முயன்றார். இதை பார்த்ததும் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் விரைந்து சென்று அவர்கள் மீது தண்ணீரை ஊற்றி தற்கொலை முயற்சியை தடுத்தனர் .பின்னர் அவர்கள் ரேஸ்கோர்ஸ் போலீசாரிடம் ஒப்படைக்கப்பட்டனர். விசாரணையில் அவரதுபெயர் முருகேசன் என்றும், கோவை புலிய குளத்தில் உள்ள ஒரு கோவிலில் கணக்கெழுதும் வேலை செய்து வந்தது தெரிய வந்தது. தற்கொலை முயற்சி குறித்து போலீசாரிடம் அவர் கூறியதாவது:- தன்னை பணி செய்ய விடாமல் உயர் அதிகாரி ஒருவர் இடையூறு செய்து வருகிறார் .மேலும் தனக்கு 2 மாதமாக சம்பளம் தரவில்லை. அதோடு அவர் பார்த்த வேலைக்கு தற்காலிக ஊழியர் ஒருவரை நியமித்துள்ளார். இதனால் மனவேதனை அடைந்து நான்என் மனைவியுடன் கலெக்டரிடம் மனு கொடுக்க வந்தேன். அப்போது டீசல் வாங்கி வந்து மனைவியுடன் தீக்குளிக்க முயன்றேன்.என்னை போலீசார் தடுத்து விட்டனர் என்றார் .இதையடுத்து முருகேசன் மற்றும் அவருடைய மனைவியை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதே போல கலெக்டர் அலுவலகத்திற்கு நேற்று 35 வயது மதிக்கத்தக்க வாலிபர் ஒருவர் மனு கொடுக்க வந்தார். அவர் கலெக்டர் அலுவலகம் முன் வந்ததும் திடீரென்று தான் மறைத்து வைத்திருந்த சிறிய கத்தியைஎடுத்து தனது இடது கையை அறுத்து தற்கொலைக்கு முயன்றார் .அப்போதுஅங்கு நின்று கொண்டிருந்த போலீசார் ஓடிச்சென்று காப்பாற்றி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர் இதனால் அங்கு பரப்பு ஏற்பட்டது. விசாரணையில் அவர் கோவையில் உள்ள பி. என். புதூரை சேர்ந்த நிவாசன் ( வயது 35) என்பது தெரியவந்தது அவரிடம் ரேஸ்கோர்ஸ் போலீசார் விசாரணை நடத்தினார்கள். அப்போது அவர் நான் டிரைவராக வேலை பார்த்து வருகிறேன். கொரோனா காலத்தில் சிறிது சிறிதாக கடன் வாங்கினேன். தற்போது அது பெரும் கடனாக மாறிவிட்டது. அதை அடைப்பதற்காக எனது தந்தையின் சகோதரர்களிடம் சென்று எனது தந்தைக்கு சேர வேண்டிய சொத்தை பிரித்து தருமாறு கேட்டேன் .அவர்கள் தர மறுத்து என்னையும் எனது தாயையும் தரக்குறைவாக பேசி அவமானப்படுத்தி விட்டனர் .எனக்கு சொத்து வேண்டாம் அவர்கள் பணம் கொடுத்தால் போதும் கடனை அடைத்து விடுவேன். அதற்குரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்..இந்த சம்பவங்களால் கோவை கலெக்டர் அலுவலகத்தில் நேற்று பரபரப்பு ஏற்பட்டது.