கோவையில் கேட்பாரற்று நின்ற கார் ரத்தக்கரை ஆயுதங்களால் பரபரப்பு.

கோவை உக்கடம் ராமர் கோவில் பின்புறம், கடந்த 3 நாட்களாக கேட்பாரற்று கார் ஒன்று நிறுத்தப்பட்டிருந்தது.பெரிய கடை வீதி போலீசார், காரை சோதனையிட்டனர். கார், பெரம்பலூர் மாவட்டத்தை சேர்ந்த பாலமுருகன் என்பவருடையது எனத் தெரிந்தது. காரைத் திறந்து பார்த்தபோது காருக்குள் கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள், துண்டு, போர்வை இருந்தன. மேலும், காரில் ரத்தக்கறையும் இருந்தது.பாலமுருகனின் மனைவி தீபா ஆசிரியையாக பணியாற்றி வந்த இவர், கடந்த 17-ம் தேதி முதல் மாயமானதும், பெரம்பலுார் மாவட்டம் வி.களத்தூர் பகுதியை சேர்ந்த பள்ளி ஆசிரியர் வெங்கடேஷ் என்பவரும் அதே நாளில் காணாமல் போனதும் கண்டுபிடிக்கப்பட்டது.இதுகுறித்து, இரு குடும்பத்தினரும் அளித்த புகாரின் பேரில், அந்த மாவட்ட போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர். மாயமான இருவரும் ஆசிரியர்கள் என்பதால், அவர்கள் காரில் கோவை வந்தனரா என்பது குறித்து போலீசார் விசாரிக்கின்றனர். பெரம்பலூர் மாவட்டபோலீசாரம் கோவை வந்து இது குறித்து விசாரிக்கின்றன.