கோவையில் ரத்த கரையுடன் நின்ற மர்ம கார் .

கோவை உக்கடம் ராமர் கோவில் காய்கறி மார்க்கெட் பின்புறம் கடந்த 3 நாட்களாக மர்ம கார் அனாதையாக நின்று  கொண்டிருந்தது. இது குறித்து பெரிய கடை வீதி போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது.போலீசார் விரைந்து வந்து அந்த காரை பார்வையிட்டனர். விசாரணையில் அந்த கார் பெரம்பலூர் மாவட்டத்தைச் சேர்ந்த பாலமுருகன் என்பவருக்கு சொந்தமானது என்பது தெரியவந்தது. அந்த காரை திறந்து பார்த்தபோது கத்தி உள்ளிட்ட ஆயுதங்கள் மற்றும் ரத்தக்கறை படிந்திருந்தது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. விசாரணையில் பாலமுருகனின் மனைவியான ஆசிரியை தீபா அந்த காரில் கோவைக்கு வந்து அனாதையாக விட்டு விட்டு மாயமாகி இருக்கலாம் என்று கூறப்படுகிறது. பெரம்பலூர் மாவட்ட போலீசார் கோவை வந்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.