பஸ் விபத்தில் 8 பேர் உயிரிழந்த வழக்கில் டிரைவருக்கு 8 ஆண்டு சிறை

திருப்பூர் மாவட்டம், அவிநாசியில், கடந்த, 2015ம் ஆண்டு, ஈரோடு – கோவை தேசிய நெடுஞ்சாலையில், கிழக்கே இருந்து ஒருவழிப்பாதையில் மேற்கு நோக்கி வந்த, கே.கே.சி., கோகிலா (டிஎன்.33.பிஎச்.3414) என்ற தனியார் பஸ், தாறுமாறாக சென்று, ரோட்டில் கவிழ்ந்தது.
‘இதில் 8 பேர் உயிரிழந்தனர்; 52 பேர் படுகாயமடைந்தனர். விபத்துக்கு காரணமான, ஈரோடு மாவட்டம் கொடுமுடியை சேர்ந்த, பஸ் டிரைவர் சரவணனை அவிநாசி போலீசார் கைது செய்தனர். இவ்வழக்கு, அவிநாசி ஜே.எம்., கோர்ட்டில் நடந்து வந்தது. நீதிபதி சபீனா, வழக்கு விசாரணையை முடித்து, தீர்ப்பு வழங்கினார். அதில், தாறுமாறாக பஸ் ஓட்டிய, டிரைவர் சரவணனுக்கு 8 ஆண்டு சிறை தண்டனையும், ரூ 39 ஆயிரத்து, 500 அபராதமும் விதித்துதீர்ப்பு வழங்கினார். தீர்ப்புக்கு பின், சரவணன், கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அரசு தரப்பில் வக்கீல் ஹேமா மகேஸ்வரி ஆஜரானார்.