குண்டடம் பள்ளி குழந்தைகளுக்கு அடுப்பில்லா சமையல் போட்டி..!!

திருப்பூர் மாவட்டம், குண்டடத்தில் சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட பணிகள் சார்பில், குண்டடம் வட்டார அளவில் பள்ளி குழந்தைகளுக்கு அடுப்பில்லா சமையல் போட்டி குண்டடம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்றன.
இதில் சுமார் 40க்கு மேற்பட்ட மாணவர்கள் மற்றும் சேடபாளையம் மாதிரிப்பள்ளி மாணவர்களும் இதில் கலந்து கொண்டு தனித்தனியே அவர்களின் திறமைகளை வெளிப்படுத்தினர்.மேலும் இவர்களின் படைப்புகளை ஆய்வு செய்ததில் மூன்று வெற்றியாளர்கள் என தேர்வு செய்யப்பட்டனர்.
இதில் போட்டியில் வென்ற குண்டடம் மேல்நிலை பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவன் சுஜித் என்பவருக்கு முதல் பரிசாக ரூ.2000மும், குண்டடம் மாதிரி பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவி கௌதமி என்பவருக்கு இரண்டாம் பரிசாக ரூ.1000மும், குண்டடம் மேல்நிலை பள்ளியின் ஆறாம் வகுப்பு மாணவி பிரியதர்சினி என்பவருக்கு மூன்றாம் பரிசாக ரூ.500 மற்றும் அனைவருக்கும் சான்றிதழ்கள் வழங்கபட்டது. மேலும் இப்போட்டிகளில் கலந்து கொண்ட அனைவருக்கும் ஆறுதல் பரிசு வழங்கப்பட்டது.
மேலும் இந்நிகழ்வில் குண்டடம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தலைமை ஆசிரியர் ஜெ. பாஸ்கரன்,குழந்தை வளர்ச்சி திட்ட அலுவலர் ச.தீபா, குண்டடம் பேரூராட்சி வார்டு உறுப்பினர் சுரேஷ், அஜித்குமார், மேற்பார்வையாளர் நிலை1 ர.ராமாத்தாள் மேற்பார்வையாளர் நிலை 2. வெண்ணிலா, வட்டார ஒருங்கிணைப்பாளர் சங்கீதா,
அங்கன்வாடி பணியாளர்கள் மற்றும் பள்ளி ஆசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்..