கோவையில் வீடு புகுந்து சி.சி.டி.வி. கேமரா உடைத்து ‘வைபை’பெட்டி திருட்டு..!

கோவை பீளமேடு பக்கமுள்ள சேரன் மாநகர் கிழக்கு பகுதியை சேர்ந்தவர் சசிலாராணி (வயது 56)அங்கு இவருக்கு சொந்தமான 5வீடுகள் உள்ளது.அதில் 3 வீடுகளை சக்திவேல் என்பவருக்கு வாடகை கொடுத்துள்ளார்.அதில் அவர் ஒர்க்ஷாப் நடத்தி வருகிறார் . கடந்த 2 ஆண்டுகளாக வாடகை கொடுப்பதில்லை. இதனால் அவர்களுக்குள் தகராறு இருந்து வந்தது. இந்த நிலையில் 14- 6- 2022 அன்று சக்திவேல் பிரதீப் குமார், பத்மாவதி உட்பட 5 பேர் அவரது வீட்டில் புகுந்து, அங்கிருந்த சிசிடிவி கேமராவை உடைத்து சேதபடுத்திவிட்டு “வைபை”பெட்டியை திருடி சென்று விட்டனர்.இது குறித்து சசிலா ராணி பீளமேடு போலீசில் புகார் செய்துள்ளார் .போலீசார் சக்திவேல், பிரதீஷ் குமார் பத்மா தேவி, திலகமணி செல்வராஜ் ஆகியோர் மீது 4 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்கள்.