கவர்னர் ஆர்.என்.ரவி இன்று கோவை வருகை – பலத்த போலீஸ் பாதுகாப்பு.!!

கோவை : தமிழ்நாடு கவர்னர் ஆர்.என். ரவி 2 நாட்கள் பயணமாக இன்று ( வியாழக்கிழமை) சென்னையில் இருந்து விமானம் மூலம் காலை 9:25 மணிக்கு கோவை வந்தார். விமான நிலையத்தில் அவருக்கு சிறப்பான வரவேற்பு கொடுக்கப்பட்டது. பின்னர் அங்கிருந்து பாரதியார் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு காலை 10 மணிக்கு காரில் சென்றார். பாரதியார் பல்கலைக்கழகத்தின் 38வது பட்டமளிப்பு விழா நிகழ்ச்சியில் பங்கேற்று மாணவ மாணவிகளுக்கு பட்டங்களை வழங்கினார். மேலும் பதக்கம் பெற்ற மாணவ -மாணவிகளுடன் கலந்துரையாடினார். இதை யடுத்து மாலை 3:30 மணிக்கு காரில் பழனிக்கு புறப்பட்டு சென்றார்..அங்கு இன்று மாலை 6-30 மணிக்கு பழனி தண்டாயுதபாணி கோவிலில் சாமி தரிசனம் செய்கிறார்.மீண்டும் பாரதியார் பல்கலைக்கழக விருந்தினர்மாளிகைக்கு வருகிறார்.இரவில் அங்கு ஓய்வெடுக்கிறார் நாளை( வெள்ளிக்கிழமை) பேரூர் செல்கிறார். அங்குகாலை 10 மணி முதல் 11 மணி வரை நடைபெறும் நொய்யல் பெரு விழா நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்..அந்த நிகழ்ச்சியை முடித்துக் கொண்டு பாரதியார் பல்கலைக்கழக விருந்தினர் மாளிகைக்கு வருகிறார் அங்கு மதிய உணவை முடித்துக் கொண்டு மதியம் 2 – 10 மணி விமானத்தில் சென்னை புறப்பட்டு செல்கிறார் கோவைக்கு வருகை தரும் ரவிக்கு கருப்பு கொடி காட்டு போவதாகவும் தந்தை பெரியார் திராவிட கழகம் அறிவித்துள்ளது. நீட் தேர்வு எதிர்ப்பு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்காமல் கவர்னர் எழுத்தடித்து வருவதை கண்டித்து இந்த போராட்டத்தில் ஈடுபட போவதாக அந்த அமைப்பு பொதுச்செயலாளர் ராமகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். இந்த போராட்ட அறிவிப்பு காரணமாக கோவைக்கு வரும் கவர்னருக்கு வழக்கத்தை விட கூடுதல் போலீஸ் பாதுகாப்பு அளிக்க கோவை மாநகரம் மாவட்ட போலீசார் நடவடிக்கை எடுத்துள்ளனர். கோவைவிமான நிலையம், பாரதியார் பல்கலைக்கழகம், பேரூர் தமிழ் கல்லூரி பகுதி உட்பட அவர் வந்து சொல்லும் அனைத்து இடங்களிலும் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர் கருப்பு கொடி காட்ட முயன்றால் அவர்களை மடக்கி பிடித்து கைது செய்ய நகரில் பல இடங்களில் போலீசார் ஏராளமாக குவிக்கப்பட்டுள்ளனர்..