ஆகஸ்ட் மாதம் 1ம் தேதி முதல் ஆசிரியர்களின் வருகைப்பதிவு செயலி மூலம் கணக்கிடப்படும் என பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது .
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தற்போது ஆசிரியர்களின் வருகைப்பதிவு நோட்டில் கையெழுத்து போடுவதன் மூலம் கணக்கிடப்படுகிறது. இந்நிலையில் ஆகஸ்ட் 1ம் தேதி முதல் இந்த நடைமுறை மாற உள்ளது.
தமிழகம் முழுவதும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்களின் வருகைப்பதிவு செயலி மூலம் கணக்கிடப்படும் என பள்ளிக்கல்வித்துறை அதிரடி திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இத்திட்டத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்பு இம்மாத இறுதியில் வெளியாகும் என தெரிகிறது. அதே போல் மாவட்ட கல்வி, முதன்மை கல்வி அலுவலங்களிலும் இத்திட்டத்தை அமல்படுத்த உள்ளதாக கூறப்படுகிறது.
இந்த செயலியில் காலை 10 மணிக்குள் வருகையை பதிவு செய்யவில்லை என்றால் சம்பளம் பிடித்தம் செய்யப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது. மேலும் அந்த செயலியில் ஆசிரியர்கள் பள்ளி வளாகத்தில் இருந்து தான் வருகையை பதிவு செய்கிறார்களா என்பதை கண்கானிக்கவும் செயலில் பிரத்யேகமாக ஏற்பாடுகள் செய்துள்ளதாகவும் தகவல் வெளியாகி உள்ளது.
Leave a Reply