குட் நியூஸ்… உஜ்வாலா திட்டம்.. வீட்டு உபயோக சிலிண்டர் விலை ரூ.200 குறைப்பு – மத்திய அமைச்சரவை அதிரடி.!!

ஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு ரூ.200 மானியம் வழங்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான அமைச்சரை கூட்டத்தில் சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. கூடுதலாக மானியம் வழங்கப்படுவதன் மூலம் உஜ்வாலா திட்டத்தின் கீழ் வழங்கப்படும் சிலிண்டர் விலை ரூ.200 குறைக்கப்படும் என்பது குறிப்பிடப்படுகிறது.

குறைக்கப்படும் ரூ.200-ஐ எண்ணெய் நிறுவனங்களுக்கு நேரடியாக மத்திய அரசே வழங்கும் என மத்திய அமைச்சர் அனுராக் தாகூர் தெரிவித்தார். எனவே, ரக்ஷா பந்தன் பண்டிகைக்கு நாட்டு மக்களுக்கு பரிசாக கூடுதலாக ரூ.200 சிலிண்டர் விலை குறைக்கப்படுகிறது. இதன் மூலம் உஜ்வாலா திட்ட பயனாளிகளுக்கு சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றுக்கு ரூ.400 மானியம் வழங்கப்படும் என்றார்.

மேலும், உஜ்வாலா திட்டத்தின் கீழ் 75 லட்சம் புதிய இலவச இணைப்புகள் வழங்கப்படும் எனவும் அமைச்சர் அறிவித்தார். இதனிடையே, நாடு முழுவதும் உஜ்வாலா திட்டத்தின் கீழ் 10 கோடி எரிவாயு உள்ளதாகவும் மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது. உஜ்வாலா திட்டத்தின் கீழ் தமிழ்நாட்டில் 32 லட்சம் பேர் சமையல் எரிவாயு இணைப்புகளை பெற்றுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.

சமையல் எரிவாயு சிலிண்டர் விலை குறைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சிகள் பல மாதங்களாக வலியுறுத்தி வருகின்றனர், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை சரிவை சந்தித்தபோதும் சமையல் எரிவாயு விலை குறைக்கப்படாமல் இருந்தது. இந்த நிலையில், உஜ்வாலா திட்டத்தின் கீழ் சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கூடுதலாக ரூ.200 மானியம் வழங்க மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது..