மணலி விரைவு சாலையில் 14 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரண்டு லட்சம் வாகனங்கள் போக்குவரத்து நெரிசல் ஏற்படுத்துகிறது…

ஆவடி போலீஸ் கமிஷனர் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள செங்குன்றம் போக்குவரத்து உட்கோட்டத்தின் கீழ் உள்ள திருவொற்றியூர் பஞ்செட்டி பொன்னேரி நெடுஞ்சாலை வடசென்னை அனல் மின் நிலைய சாலை 200 அடி சாலை மற்றும் மணலி விரைவு சாலைகளில் தினசரி 2 லட்சத்திற்கும் மேற்பட்ட கனரக மற்றும் சரக்கு பெட்டக வாகனங்கள் சென்னை துறைமுகம் எண்ணூர் காமராஜர் துறைமுகம் காட்டுப்பள்ளி அதானி துறைமுகம் என் சி டி பி எஸ் நிறுவனங்கள் பெட்ரோலியம் நிறுவனங்களுக்கு சென்று வருகின்றன திருவெற்றியூர் பஞ்செட்டி பொன்னேரி சாலையில் 33 கண்டெய்னர் பெட்டங்களை கையாளும் நிறுவனங்களும் மற்றும் 20 எம்டீ கண்டைனர் யார்டு களும் உள்ளன இச்சாலையில் வள்ளுர் சந்திப்பு முதல் form13 சந்திப்பு வரை சுமார் 14 கிலோமீட்டர் தூரம் அதிகப்படியான வாகன போக்குவரத்தினால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது மேற்படி சாலைகளில் பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் எவ்வித இடையூறும் இன்றி பாதுகாப்பாக சென்று வர ஆவடி போலீஸ் கமிஷனர் கே சங்கர் உத்தரவின் பேரில் போக்குவரத்து துணை ஆணையர் ஏ ஜெயலட்சுமி அவர்களின் மேற்பார்வையில் வள்ளூர் சந்திப்பு முதல் form 13 சந்திப்பு வரை குமார் 14 கிலோமீட்டர் தூரத்திற்கு கனராக வாகனங்களுக்கு பிரத்யேக வழித்தடம் அமைக்கப்பட்டு கடந்த ஒரு வார காலமாக சோதனை ஓட்டம் மேற்கொள்ளப்பட்டு நேற்று 22.12.2023 ஆவடி போலீஸ் கமிஷனர் சங்கர் அவர்களால் துவக்கி வைக்கப்பட்டது இதனால் மீஞ்சூர் மணலி புதுநகர் எண்ணூர் பகுதி வாழ் பொதுமக்கள் சாலைகளில் பாதுகாப்பாக பயணிக்கலாம் இந்த நிகழ்ச்சிக்கு செங்குன்றம் போக்குவரத்து காவல் உதவி ஆணையாளர் ஆர் மலைச்சாமி ஆவடி போக்குவரத்து புலனாய்வு பிரிவு உதவி ஆணையாளர் ஆர் பிராங்க் டி ரூபன் மற்றும் போக்குவரத்து பிரிவு போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்