ரயில் பயணிகளுக்கு 20 ரூபாய்க்கு முழு சாப்பாடு – தெற்கு ரயில்வே அசத்தல் அறிவிப்பு.!!

ரயில்களில் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணிக்கும் மக்களுக்காக அந்த பெட்டியின் அருகிலேயே குறைந்த விலையில் உணவு பொட்டலங்களை விற்பனை செய்ய ரயில்வே நிர்வாகம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது அதன்படி ரூபாய் 20க்கு ரயில் பயணிகள் முழு சாப்பாடே வாங்கி சாப்பிட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்தியா முழுவதும் தினமும் ஆயிரக்கணக்கான ரயில்கள் பயணம் செய்து வருகின்றனர் . இதில் லட்சக்கணக்கான பயணிகள் பயணித்து வருகிறார்கள். ரயில்கள் தான் இந்தியா போக்குவரத்தின் முதுகெலும்பு என்றே சொல்லலாம். அந்த அளவிற்கு ரயில்களில் தான் மக்கள் அதிகம் தேர்வு செய்து பயணம் செய்கிறார்கள். நீண்ட தூரத்திற்கு பயணம் செய்ய ரயில் தான் சொகுசான வாகனமாக இருக்கிறது.
இந்நிலையில் ரயில்களில் பெரும்பாலும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளை இணைக்கப்பட்டு இருக்கும் நிலையில், குறைவான எண்ணிக்கையில் மட்டுமே முன்பதிவு செய்யப்படாத டிக்கெட்டுகளை எடுத்த பயணிகளுக்கான பெட்டிகள் ஒதுக்கப்பட்டுள்ளது, இதனால் இந்த பெட்டிகளில் கூட்டம் நிரம்பி வழியும். இது நாம் அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். இது முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்வது என்பது மிகப் பெரிய தலைவலியான விஷயமாக இருக்கும்.
அதுவும் நீண்ட தூரம் பயணம் செய்கிறோம் என்றால் பலர் உணவு கூட கிடைக்காமல் சிரமப்பட வேண்டிய சூழ்நிலை கூட இருக்கிறது. முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் பெரும்பாலும் ரயிலில் இன்ஜினுக்கு அடுத்த முதல் பெட்டியாகவோ, அல்லது கடைசி பெட்டியாகவோ அல்லது இரண்டு இடங்களிலும் இணைக்கப்பட்டிருக்கும்.இதனால் ரயில் ஒரு ரயில் நிலையத்தில் நிற்கும் போது அங்கு உணவு விற்பனை செய்யும் விற்பனர்கள் பெரும்பாலும் முன்பதிவு செய்யப்பட்ட பெட்டிகளிலேயே தன் உணவுகளை விற்பனை செய்ய முயற்சி செய்வார்கள். முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளை அருகே உணவு பொட்டலங்கள் வருவது அரிதான விஷயமாக இருக்கும்.
ரயிலும் சில நிமிடங்கள் மட்டுமே ரயில் நிலையத்தில் நிற்கும் என்பதால் அங்கு பயணிகளால் இறங்கி சென்று அவர்களுக்கான உணவை தேடி வாங்கி மீண்டும் ரயிலுக்கு ஏறுவது என்பது சிரமமான விஷயமாக இருக்கும். இதனால் பலர் பட்டினியாக பயணம் செய்த சூழ்நிலை கூட ஏற்பட்டுள்ளது. இது குறித்து ரயில்வே நிர்வாகத்திற்கு பலர் புகார் அளித்துள்ளார்கள். இந்நிலையில் இந்த பிரச்சனைக்கு தீர்வாக ரயில்வே நிர்வாகம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி இனி முன்பதிவு செய்யப்படாத பெட்டிகள் இருக்கும் இடத்தில் ரயில் வருவதற்கு முன்பே நகரும் ஸ்டால்களை கொண்டு சென்று நிறுத்தி அங்கு குறைந்த விலையில் உணவுகளை விற்பனை செய்ய ரயில்வே நிர்வாகம் புதிய திட்டம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் படி ரூபாய் 20க்கு முழு சாப்பாடு கிடைக்கும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது. இதன் மூலம் முன்பதிவு செய்யப்படாத பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் உடனடியாக தங்கள் உணவுகளை குறைந்த விலையில் வாங்கிக் கொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது ரயிலில் தொடர்ந்து முன்பதிவு செய்யாமல் பயணிக்கும் ஏழை எளிய மக்களுக்கு உதவும் வகையில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்துவதாக தெரிவித்துள்ளது.
இந்த திட்டம் கடந்த ஆண்டு சோதனை கட்டமாக பல்வேறு ரயில் நிலையங்களில் அறிமுகப்படுத்தப்பட்டு விட்டது. இந்த சோதனை முயற்சி வெற்றி பெற்ற நிலையில் இதை விரிவுபடுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதன்படி தற்போது தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் உள்ள முக்கிய ரயில் நிலையங்களில் இந்த திட்டத்தை அறிமுகப்படுத்த ரயில்வே நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தென்னக ரயில்வேயில் மொத்தம் சென்னை மண்டலத்தில் உள்ள ஐந்து ஸ்டேஷன்கள், திருச்சி மண்டலத்தில் உள்ள மூன்று ஸ்டேஷன்கள், சேலம் மண்டலத்தில் உள்ள நான்கு ஸ்டேஷன்கள், மதுரை மண்டலத்தில் உள்ள இரண்டு ஸ்டேஷன்கள், பாலக்காடு மண்டலத்தில் உள்ள நான்கு ஸ்டேஷன்கள், திருவனந்தபுரம் மண்டலத்தில் உள்ள 11 ஸ்டேஷன்கள் ஆகிய இடங்களில் இந்த குறைந்த விலை உணவு வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நீண்ட ஆண்டுகளாக முன்பதிவு இல்லாத பெட்டிகளில் பயணம் செய்யும் பயணிகள் பல்வேறு விதமான அவஸ்தைகளை சந்தித்து வருகிறார்கள். அதில் முக்கியமானது அவர்களுக்கு உணவு கிடைப்பது தான். பெரும்பாலான நேரங்களில் பிளாட்பார்மில் விற்பனை செய்யும் வியாபாரிகள் முன்பதிவு உள்ள பெட்டிகளிலேயே அதிகம் வியாபாரம் செய்கிறார்கள். முன்பதிவு இல்லாத பெட்டிகள் பக்கம் வருவதில்லை. இதற்கு ரயில்வே நிர்வாகம் சொல்லியுள்ள தீர்வு நிச்சயம் வரவேற்க வேண்டியது என்று பொதுமக்கள் கருதுகிறார்கள் மேலும் ஏழை குடும்பங்களை சேர்ந்தவர்கள் ரயில் பயணத்தின் போது அதிக விலைக்கு உணவுகளை வாங்கி உண்ணுவதற்கு யோசிப்பார்கள் இப்பொழுது பயணம் செய்யும் ரயிலின் அருகிலேயே ரூபாய் இருபதுக்கு முழு சாப்பாடு கிடைப்பது பொது மக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சி என்று சமூக ஆர்வலர்கள் கருதுகிறார்கள்