அனைத்து அரசு நூலகங்களிலும் இலவச WiFi வசதி- அமைச்சர் அன்பில் மகேஷ் அறிவிப்பு..!

மிழகத்தில் அனைத்து அரசு நூலகங்களிலும் வைஃபை வசதி அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார்.

போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக கடந்த ஜனவரி மாதம் 500 அரசு நூலகங்களில் வை பை வசதி அமைக்கப்பட்டது. சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தில் அந்தியூர் பகுதியில் உள்ள நூலகத்தில் வைஃபை வசதி ஏற்படுத்தி தரப்படுமா எனவும் கம்பம் தொகுதியில் உள்ள நூலகங்கள் சேதமடைந்துள்ளதால் அதனை புதுப்பிக்க அரசு நடவடிக்கை எடுக்குமா எனவும் சட்டமன்ற உறுப்பினர்கள் கேஜி வெங்கடாசலம் மற்றும் கம்பம் ராமகிருஷ்ணன் ஆகியோர் கேள்வி எழுப்பினர்.

அதற்கு பதில் அளித்து பேசிய அமைச்சர் அன்பில் மகேஷ், தமிழகத்தில் மாணவர்களின் கல்வி படிப்பை மேம்படுத்துவதற்கு பல்வேறு நலத்திட்டங்களை அரசு அறிமுகம் செய்துள்ளது. அதன்படி கந்த வருடம் மானிய கோரிக்கையில் கிராமப்புற நூலகங்கள் மற்றும் போட்டி தேர்வுக்கு படித்துக் கொண்டிருப்பவர்களுக்கு உதவும் வகையில் வைஃபை வசதி அறிமுகம் செய்யப்படும் என அறிவிக்கப்பட்டது. அதன்படி போட்டித் தேர்வு எழுதும் மாணவர்களுக்காக அரசு நூலகங்களில் கடந்த ஜனவரி மாதம் முதல் கட்டமாக 500 நூலகங்களில் வைப்பை வசதி அமைக்கப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக அனைத்து நூலகங்களிலும் வைஃபை வசதிகள் அமைக்கப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.