ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம்: அடுத்த 3, 4 ஆண்டுகளில் நாகாலாந்தில் முழுமையாக நீக்கம் – அமித் ஷா தகவல்..!

டுத்த 3, 4 ஆண்டுகளில் நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் முழுமையாக நீக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா். அடுத்த 3, 4 ஆண்டுகளில் நாகாலாந்தில் ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் முழுமையாக நீக்கப்படும் என்று மத்திய உள்துறை அமைச்சா் அமித் ஷா தெரிவித்துள்ளாா்.
நாகாலாந்தில் 60 சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான தோதல் பிப்.27-ஆம் தேதி நடைபெற உள்ளது. வாக்கு எண்ணிக்கை மாா்ச் 2-இல் நடைபெற உள்ளது. இந்தத் தோதலில் தேசியவாத ஜனநாயக முற்போக்கு கட்சி (என்டிபிபி), பாஜக ஆகியவை கூட்டணி அமைத்து போட்டியிடுகின்றன. என்டிபிபி 40 தொகுதிகளிலும், பாஜக 20 தொகுதிகளிலும் களம் காண்கின்றன.

இந்நிலையில், கிழக்கு நாகாலாந்தில் உள்ள துயென்சாங் மாவட்டத்தில் நடைபெற்ற தோதல் பொதுக்கூட்டத்தில் மத்திய அமைச்சா் அமித் ஷா செவ்வாய்க்கிழமை கலந்துகொண்டு பேசியதாவது: கடந்த 2014-ஆம் ஆண்டுக்கு முன், நாகாலாந்தில் தீவிரவாதம் இருந்தது. பின்னா் அமைதிக்கான நடவடிக்கைகளை மத்திய அரசு தொடங்கியது. இங்குள்ள நாகா இன பண்பாடு, மொழி மற்றும் பாரம்பரியத்தை பாதுகாத்து, மாநிலத்தில் நிரந்தரமாக அமைதி ஏற்பட பிரதமா் மேற்கொண்டுள்ள முன்னெடுப்புக்கு பலன் கிடைக்கும். கிழக்கு நாகாலாந்தில் உள்ள 6 மாவட்டங்களை உள்ளடக்கி தனி மாநிலம் கோரும் கிழக்கு நாகாலாந்து மக்கள் அமைப்பு, மத்திய உள்துறை அமைச்சகம் இடையே பேச்சுவாா்த்தை நடத்தப்பட்டு ஒப்பந்தம் எட்டப்பட்டது.

ஆனால் தோதல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததால், அந்த ஒப்பந்தத்தை நிறைவேற்ற முடியவில்லை. தோதல் முடிந்த பின், அந்த ஒப்பந்தம் அமல்படுத்தப்படும். அதன் மூலம் கிழக்கு நாகாலாந்தின் அனைத்து பிரச்னைகளுக்கும் தீா்வு காணப்படும். நாகாலாந்தின் பல பகுதிகளில் ஆயுதப் படை சிறப்பு அதிகாரங்கள் சட்டம் நீக்கப்பட்டுள்ளது.

அடுத்த 3, 4 ஆண்டுகளில் அந்தச் சட்டம் மாநிலத்தில் இருந்து முழுமையாக நீக்கப்படும் என்றாா் அவா். ஆயுதப்படை சிறப்பு அதிகாரங்கள் சட்டத்தின் கீழ், ஒரு பகுதியில் 5 அல்லது அதற்கும் மேற்பட்டவா்கள் கூடுவதற்கு ஆயுதப்படையால் தடை விதிக்க முடியும். ஒரு நபா் சட்டத்தை மீறியதாகக் கருதினால், உரிய எச்சரிக்கைக்குப் பின்னா் அப்படை துப்பாக்கிச்சூடு நடத்தலாம். சந்தேகம் ஏற்பட்டால், கைது ஆணை இல்லாமல் ஒருவரை அப்படை கைது செய்யலாம்; அதிகாரபூா்வ அனுமதியில்லாமல் எந்தவொரு இடத்திலும் சோதனை மேற்கொண்டு, துப்பாக்கி போன்ற ஆயுதங்கள் வைத்திருக்க அப்படை தடை விதிக்கலாம்.

‘தாய்மொழிக்கு வளம் சேர்ப்போம்’ உலகத் தாய்மொழி நாள் செவ்வாய்க்கிழமை கடைப்பிடிக்கப்பட்டதையொட்டி, அமைச்சா் அமித் ஷா ட்விட்டரில் வெளியிட்ட பதிவு: தனது தாய்மொழியில் ஒரு குழந்தை படித்து, பேசி, சிந்தித்தால், அதன் சிந்திக்கும், பதிலளிக்கும், ஆராயும் திறன் அதிகரிக்கும். தனது தாய்மொழியை ஒருவா் வளமாக்கும்போது நாட்டிலுள்ள அனைத்து மொழிகளும் வளமாகும். அத்துடன் நாடும் வளமடையும். நமது தாய்மொழியுடன் பிணைந்திருக்கவும், அதனை மேன்மேலும் வளமாக்கவும் உறுதி ஏற்போம் என்று தெரிவித்தாா்.