கோவை மக்களின் கவனத்திற்கு… 2 நாட்களுக்கு சிறப்பு வரி வசூல் முகாம்..!

கோவை மாநகரில் 2 நாட்களுக்கு சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக, மாநகராட்சி ஆணையர் பிரதாப் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
2022- 2023 நடப்பு நிதியாண்டின் இரண்டாம் அரையாண்டு வரையிலான காலத்தில் மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய சொத்து வரி, காலியிட வரி, தொழில் வரி மற்றும் குடிநீர்க் கட்டணம் முதலிய அனைத்து நிலுவைகளையும் செலுத்த ஏதுவாக, மக்களின் வசதிக்காக ஜனவரி 21 மற்றும் 22ஆகிய தேதிகளில் கீழ்க்கண்ட இடங்களில் சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெறவுள்ளன.

சிறப்பு வரி வசூல் முகாம்கள் நடைபெறும் இடங்கள்: கிழக்கு மண்டலம் 56, 57ஆவது வார்டுக்கு உள்பட்ட ஒண்டிப்புதூா் அரசுப் பள்ளி, திருச்சி சாலை மற்றும் 24ஆவது வார்டுக்கு உள்பட்ட கொடிசியா சாலையில் உள்ள மாநகராட்சி பிரிவு அலுவலகம். மேற்கு மண்டலம் 35ஆவது வாா்டுக்கு உள்பட்ட நீலியம்மன் நகா் 3ஆவது வீதி மற்றும் நாகாத்தம்மன் கோயில் வளாகம், 40ஆவது வார்டில் பொங்காளியூா் மாநகராட்சிப் பள்ளி, 34ஆவது வார்டில் பூம்புகாா் நகா், மணி மஹால் மண்டபம்.

தெற்கு மண்டலம் 76ஆவது வார்டில் பாரதி சாலை, சாஸ்தா நகா், 77ஆவது வார்டில் ராமமூா்த்தி சாலை, இ.பி.காலனி, 89ஆவது வார்டில் பள்ளிக்கடை வீதி மாநகராட்சி வார்டு அலுவலகம்.
வடக்கு மண்டலம் 28ஆவது வார்டுக்கு உள்பட்ட காமதேனு நகா் மாநகராட்சி வார்டு அலுவலகம், 19ஆவது வார்டு மணியகாரன்பாளையம் அம்மா உணவகம். மத்திய மண்டலம் 32ஆவது வார்டு சிறுவா் பூங்கா, ரத்தினபுரி, 63ஆவது வார்டு ஒலம்பஸ் 80 அடி சாலையில் உள்ள மாநகராட்சி வணிக வளாகம், 84ஆவது வார்டு ஜி.எம்.நகரில் உள்ள தா்க்கத் இஸ்லாம் பள்ளி ஆகிய பகுதிகளில் நடைபெறும் முகாமை மக்கள் பயன்படுத்தி, மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வரியை செலுத்த கேட்டுக் கொள்ளப்படுகிறது என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.