சென்னை தனியார் ஸ்டீல் நிறுவனம் தொடர்புடைய இடங்களில் ED சோதனை

​போலி ஆவணங்​கள் கொடுத்து வங்கியில் ரூ.300 கோடி மோசடி செய்த வழக்​கில், தனி​யார் ஸ்டீல் நிறு​வனம் தொடர்​புடைய 8 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை நடத்​தினர்.

சென்னை, அண்ணா நகரைத் தலை​மை​யிட​மாகக் கொண்டு ஒரு தனி​யார் ஸ்டீல் நிறு​வனம் இயங்கி வரு​கிறது. இதன் தொழிற்​சாலை திரு​வள்​ளூர் மாவட்​டம் கும்​மிடிப்​பூண்​டி​யில் உள்​ளது.இந்​நிறு​வனம், கடந்த 2008 முதல் 2014 வரையி​லான கால​கட்​டத்​தில், பல்​வேறு தவணை​களாக எஸ்பிஐ வங்​கி​யில் ரூ.109 கோடி கடன் பெற்​றுள்​ளது. ஆனால், வாங்​கிய கடனைத் திருப்​பிச் செலுத்​தாமல் ஏமாற்​றியதுடன், அவர்​கள் சமர்ப்​பித்த ஆவணங்​கள் போலி​யானவை என்​பது தெரிய வந்தது.இதுதொடர்​பாக, கடந்த 2020-ம் ஆண்​டு சிபிஐ​யிடம் வங்​கி​யின் சார்​பில் புகார் அளிக்​கப்​பட்​டது. இப்புகாரின் அடிப்​படை​யில், ஸ்டீல் நிறு​வனத்​தின் மேலாண் இயக்​குநர் கிருஷ்ண​மூர்த்​தி, இயக்​குநர்​கள் வடி​வாம்​பாள், சீனி​வாசன் உள்​ளிட்​டோர் மீது சிபிஐ வழக்​குப் பதிவு செய்​தது.
விசா​ரணை​யில், வங்​கி​யில் பெற்ற கடனை தொழிலுக்​குப் பயன்​படுத்​தாமல், சட்​ட​விரோத​மான முறை​யில் வெளி​நாடு​களில் உள்ள தங்​களது துணை நிறு​வனங்​களுக்​குத் திருப்பி மோசடி செய்​தது கண்​டறியப்​பட்​டது.இதன்மூலம், வங்​கிக்கு வட்​டி​யுடன் சேர்த்து சுமார் ரு.300 கோடி இழப்பு ஏற்​படுத்​தப்​பட்​டது தெரிய​வந்​தது. எனவே, சட்​ட​விரோத பணப்​பரி​மாற்​றத் தடைச் சட்​டத்​தின் கீழ் அமலாக்​கத் துறை தனி​யாக வழக்​குப் பதிவு செய்து தீவிர விசா​ரணை மேற்​கொண்டு வந்​தது.விசா​ரணை​யின் தொடர்ச்​சி​யாக, நேற்று சென்னை,திரு​வள்​ளூரில் மொத்​தம் 8 இடங்​களில் அமலாக்​கத் துறை அதி​காரி​கள் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.சென்னை அண்​ணாநகர் 2-வது அவென்​யூ​வில் உள்ள நிறு​வனத்​தின் அலு​வல​கம், அண்​ணாநகர் மேற்​கில் உள்ள மேலாண் இயக்​குநர் கிருஷ்ண​மூர்த்தி,லட்​சுமணசு​வாமி ஆகியோரின் வீடு​களில் காலை முதல் சோதனை நடத்​தப்​பட்​டது.

இதே​போல், அயனாவரத்​தில் உள்ள பைனான்​சி​யர் குல்​நாஸ் பேகம் என்​பவரது வீட்​டிலும் அதி​காரி​கள் சோதனை​யில் ஈடு​பட்​டனர்.இச்சோதனை​யில், பல முக்​கிய ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.