கோவையில் போதை மாத்திரை கேட்டு மருந்து கடை உரிமையாளருக்கு கத்தி குத்து: இளைஞர்கள் தப்பியோட்டம் – போலீஸ் விசாரணை

கோவையில் போதை மாத்திரை கேட்டு மருந்து கடை உரிமையாளருக்கு கத்தி குத்து: இளைஞர்கள் தப்பியோட்டம் – போலீஸ் விசாரணை

கோவையில் போதை மாத்திரை கேட்டு தர மறுத்த மருந்து கடை உரிமையாளர்க்கு இளைஞர் மூவர் சேர்ந்து கத்தி குத்துத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோவை மாவட்டம் எஸ்.ஐ.எச்.எஸ் காலனியில் மருந்துகடை வைத்து நடத்தி வருபவர் மோகன் குமார், இளைஞர்கள் ஆட்டோவில் மோகன்குமாரின் மருந்து கடைக்கு வந்துள்ளனர். வந்த மூவரும் மோகன் குமாரிடம் போதை ஏற்றும் மாத்திரைகள் வேண்டும் என கேட்டு உள்ளனர். அதற்கு

மருத்துவர் பரிந்துரை சீட்டு இல்லாமல் மாத்திரைகள். வழங்க முடியாது என்று கூறியதால் ஆத்திரத்தில் மூவரில் ஒருவர் மறைத்து வைத்து இருந்த கத்தியால் அவரை தாக்கியுள்ளார்

பின்னர் இந்த சம்பவம் குறித்து  சிங்காநல்லூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்தனர். வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.