கோவை டாக்டர்.எஸ் கார்த்திகேயனுக்கு உயர் மருத்துவ சாதனையாளர் விருது-அமைச்சர் சக்ரபாணி வழங்கினார்..!

கோவையில் “டைம்ஸ் ஆப் இந்தியா” நிறுவனத்தின் சார்பில் “டைம்ஸ் சாதனை பிசினஸ் சாதனையாளர் விருது” வழங்கும் விழா நடந்தது.இதில் பல்வேறு துறைகளில் சாதனை படைத்தவர்களுக்கு உணவு மற்றும் குடிமை பொருள் வழங்கல் அமைச்சர் சக்ரபாணி விருதுகள் வழங்கி கவுரவித்தார். கோவில்பாளையத்தில் உள்ள கே, எம் ‘சி’ ஹெச். மருத்துவமனையில் லேப்ராஸ்கோப் டாக்டராக பணியாற்றி வருபவர் டாக்டர் எஸ்.கார்த்திகேயன் இவருக்கு “மிகவும் நம்பிக்கைக்கு உரிய இளம் லேப்ராஸ்கோப் அறுவை சிகிச்சை நிபுணர்” என்ற விருது வழங்கப்பட்டது. அமைச்சர் சக்கரபாணி நேற்று நடந்த விழாவில் இதை வழங்கினார்.டாக்டர் எஸ். கார்த்திகேயன் பெருங்குடல் அறுவை சிகிச்சை” ரோபோட்டிக்” உணவு பாதை அறுவை சிகிச்சை, லேப்ராஸ்கோபி புற்றுநோய் அறுவை சிகிச்சை ஆகியவற்றில் சாதனை படைத்துள்ளார். இவர் ஐ.ஆர்.சி.ஏ.டி. பிரான்சில் லேப்ராஸ்கோப்” பெல்லோஷிப்’ பயிற்சியில் முதலிடம் பெற்றவர் ஆவார். மேலும் எப் .ஐ .சி. ஆர் .எஸ். ரோபோடிக் அறுவை சிகிச்சை பயி ற்சியின் போது சிறந்த டாக்டருக்கான விருது பெற்றவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.இவர் கோவை கே.ஜி. மருத்துவமனையில் தலைமை பொது மருத்துவராக பணியாற்றி வரும் டாக்டர் வி பி சண்முகசுந்தரத்தின் மகன் ஆவார். இவருக்கு ஏராளமான டாக்டர்களும் பொதுமக்களும் வாழ்த்து தெரிவித்தனர்.