வராதீங்க.. வராதீங்க.. நீங்கள் எங்களை ஏமாத்திட்டீங்க.. எடப்பாடிக்கு எதிராக பொங்கி எழுந்த தூங்கா நகர்… ஓன்று திரண்ட 115 ஜாதிகள்… பஸ் எல்லாம் டோட்டல் வேஸ்ட்…!

துரை: மதுரையில் எடப்பாடி பழனிசாமி சார்பில் மிகப்பெரிய பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட உள்ள நிலையில் தென் மண்டலத்தை சேர்ந்த பல்வேறு ஜாதியினர் எடப்பாடி பழனிசாமி வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து உள்ளனர்.

அதிமுகவில் நிலவும் உட்கட்சி மோதல் தற்போது ஜாதி ரீதியிலான மோதலாக உருவெடுத்து உள்ளது. கட்சிக்கு உள்ளே முக்குலத்தோர், கவுண்டர்கள், வன்னியர்கள் இடையே பிளவு ஏற்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமி முக்குலத்தோர் தலைவர்களை தொடர்ந்து ஓரம் கட்டுவதாக புகார்கள் வைக்கப்படுகின்றன. கவுண்டர்கள், வன்னியர்களுக்கு மட்டுமே அவர் ஆதரவாக இருக்கிறார்.

முக்குலத்தோர் தலைவர்களை அவர் கண்டுகொள்வதே இல்லை என்ற புகார் உள்ளது.

ஏற்கனவே வன்னியர் இடஒதுக்கீடு காரணமாக முக்குலத்தோர் தலைவர்கள், பல்வேறு இடைநிலை ஜாதியினர் எடப்பாடி மீது தென் மண்டலத்தில் கடும் அதிருப்திக்கு உள்ளானார்கள். இது சட்டசபை தேர்தலிலும் எதிரொலித்தது. அதேபோல் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலிலும் அதிமுகவின் தோல்விக்கு இது முக்கியமான காரணமாக இருந்தது. அதன்பின் தென் மண்டலத்தில் அதிமுகவினர் இடையே உட்கட்சி மோதல் தொடங்கியது. முக்கியமாக ஓ பன்னீர்செல்வம் அதிமுகவில் ஓரம்கட்டப்பட்டார்.

அதோடு அதிமுகவில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார். இதன் காரணமாக முக்குலத்தோர் தலைவர்கள் பலர் எடப்பாடிக்கு எதிராக திரும்பி உள்ளதாக கூறப்படுகிறது. தென் மண்டலத்தில் ஆர்.பி உதயகுமாரை முன்னிறுத்தி முக்குலத்தோர் வாக்குகளை தன் பக்கம் இழுக்க எடப்பாடி முயன்று வருகிறார். உதயகுமாருக்கு இதன் காரணமாகவே எதிர்க்கட்சி துணை தலைவர் பதவியும் கொடுக்கப்பட்டது. ஆனால் இதுவரை தென் மண்டலத்தில் எடப்பாடிக்கு ஆதரவாக பெரிய அலை எதுவும் உருவாகவில்லை.

இந்த நிலையில்தான் எடப்பாடி இன்று மதுரை மற்றும் சிவகாசி செல்கிறார். இரண்டு மாவட்டங்களிலும் பொதுக்குழு கூட்டம் அதிமுக சார்பாக நடத்தப்பட உள்ளது. சுமார் 30 ஆயிரம் பேர் இந்த பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ள இருக்கிறார்கள். இதற்கான ஏற்பாடுகளை எடப்பாடி பழனிசாமி தீவிரமாக செய்து வருகிறார். தென் மண்லடத்தில் முக்குலத்தோர் பிரிவினரை கவரும் வகையில் அவர் இந்த பொதுக்குழுவை நடத்த முடிவு செய்துள்ளார். இதற்காக எடப்பாடி பஸ் என்று, பஸ் ஒன்றும் களமிறக்கப்பட்டு. மதுரை முழுக்க சுற்றி விளம்பரம் செய்து வருகிறது.

ஆனால் இந்த விளம்பரங்களை எல்லாம் அடித்து நொறுக்கும் வகையில் எடப்பாடிக்கு எதிராக பல்வேறு இடங்களில் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. மதுரைக்கு வராதீங்க.. வராதீங்க.. நீங்கள் எங்களை ஏமாத்திட்டீங்க.. ஒரு ஜாதிக்கு இடஒதுக்கீடு கொடுத்து.. எங்களை ஏமாற்றி விட்டீர்கள் என்று கூறி 115 ஜாதிகளை சேர்ந்த நிர்வாகிகள் கூட்டாக போஸ்டர் ஒட்டி உள்ளனர். எங்களை முதுகில் குத்திவிட்டீர்கள்.. வஞ்சித்துவிட்டீர்கள் என்று போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன.

எடப்பாடி வர கூடிய வழி முழுக்க இந்த போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. அனைத்து மறவர் கூட்டமைப்பு மூலம் போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. எடப்பாடி வருகைக்கு எதிராக இவர்கள் போராட்டம் செய்யவும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது. இன்று மதுரை வரும் அவரை எதிர்த்து கோஷம் எழுப்ப இவர்கள் திட்டமிட்டு உள்ளனர். இதனால் தூங்கா நகரம் மிகவும் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.