புதுச்சேரி மங்கலம் தொகுதியில் மோடி பிறந்தநாள் கொண்டாட்டம்..!

புதுச்சேரி மாநிலம் மங்கலம் தொகுதி பங்கூரில்  பாரத பிரதமர் நரேந்திர மோடி பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. பாஜக மங்கலம் தொகுதி பொருப்பாளர் செந்தில் குமரன் தலைமையில், பாஜக விவசாய மாவட்ட அணி செயலாளர் கார்த்திக்கேயன் ஏற்பாட்டில் புதுச்சேரியின் உள்துறை அமைச்சர் நமச்சிவாயம் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு அப்பகுதியில் உள்ள பெண்களுக்கு சேலை மற்றும் மரக்கன்றுகள் அமைச்சர்  வழங்கினார். நிகழ்ச்சியில் கட்சி நிர்வாகிகள் மற்றும் ஊர் பொதுமக்கள் திறளாக கலந்து கொண்டனர்.