திருவண்ணாமலை ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தேசிய கொடி ஏற்றி வைத்தார்.!!

திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில்  நடைபெற்ற 76-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் தேசிய கொடியினை ஏற்றி வைத்து மரியாதை செலுத்தி, பல்வேறு துறைகளின் சார்பாக  191 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 80 இலட்சம் 32 ஆயிரத்து 846 மதிப்பிலான அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.
 திருவண்ணாமலை மாவட்டம், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலக வளாகத்தில் அமைந்துள்ள ஆயுதப்படை மைதானத்தில் நடைபெற்ற 76-வது சுதந்திர தின விழாவில் மாவட்ட ஆட்சித் தலைவர் முருகேஷ் மூவர்ண தேசியக் கொடியினை ஏற்றி வைத்து, மரியாதை செலுத்தி திறந்தவெளி வாகனத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன் ஆகியோர் காவல் துறையினரின் அணிவகுப்பை பார்வையிட்டு, சமாதானத்தை குறிக்கும் வகையில் வெண் புறாக்கள் மற்றும் பலூன்கள் பறக்கவிட்டு  தியாகிகளுக்கு சால்வை அணிவித்து மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து நரிக்குறவர் சான்றிதழ் 8 பயணாளிகளுக்கும், முதலமைச்சர் பொது நிவாரன நிதியிலிருந்து ரூ.3 இலட்சம் மதிப்பில் 3 பயணாளிகளுக்கும், இயற்கை மரணம் மற்றும் ஈமச்சடங்கு நிதியுதவி தொகை ரூ. 6 இலட்சித்து 55 ஆயிரம் மதிப்பில் 30 பயணாளிகளுக்கும், திருமண நிதியுதவி தொகை ரூ. 80 ஆயிரம் மதிப்பில் 9 பயனாளிகளுக்கும், முதியோர் உதவித்தொகை மற்றும் இதர உதவி தொகை ரூ. 1 இலட்சித்து 44 ஆயிரம் மதிப்பில் 10 பயனாளிகளுக்கும், கூட்டுறவுத்துறை சார்பாக மகளிர் நேரடி குழுக்கடனாக ரூ. 55 இலட்சம் மதிப்பில் 77 பயனாளிகளுக்கும், வருவாய்த்துறை, வேளாண்மை தோட்டகலைத்துறை   மாநில தோட்டக்கலை வளர்ச்சி திட்டம் காளான் குடில் அமைத்தல் , ஆதிதிராவிடர் நலத்துறை உள்ளிட்ட பல்வேறு துறைகளை சார்ந்தவர்களுக்கும் பயனாளிகள் என மொத்தம் 191 நபர்களுக்கு ரூ.1 கோடியே 80 இலட்சத்து 32 ஆயிரத்து 846 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் முருகேஷ் வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்கள் மாவட்ட முதன்மை நீதிபதி மதுசூதனன், முதன்மை குற்றவியல் நீதிபதி ஈஸ்வரமூர்த்தி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கார்த்திகேயன், மாநில தடகள சங்க துணை தலைவர் கம்பன்,  மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது) வெற்றிவேல், அரசு உயர் அலுவலர்கள், பணியாளர்கள், பயனாளிகள் மற்றும் பொது மக்கள் கலந்து கொண்டனர்.