கோவை : துடியலூர் வெள்ளக்கிணறு பகுதியை சேர்ந்தவர் சங்கர்குரு ( வயது 32) கட்டிட தொழிலாளி .இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணவேணி (வயது 30) என்பவரை காதல் திருமணம் செய்து கொண்டார் .சங்கர் குரு குடிப்பழக்கம் உடையவர். இதனால் அவர்களுக்குள் அடிக்கடி தகராறு ஏற்பட்டது. இதனால் வாழ்க்கையில் வெறுப்படைந்த சங்கர் குரு நேற்று அவரது வீட்டில் யாரும் இல்லாத நேரம் மனைவியின் சேலையை விட்டத்தில் கட்டி தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.இதுகுறித்து துடியலூர் போலீசில் மனைவி கிருஷ்ணவேணி புகார் செய்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.