தக்காளியை செடியிலேயே அழுகவிடும் அவலம் : பறிப்பதற்கான கூலி கூட கிடைப்பதில்லை-விவசாயிகள் வேதனை..!

கோவை மாவட்டம் காரமடை மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளான திம்மம்
பாளையம், திம்மம்பாளையம் புதூர், மருதூர், கணுவாய்பாளையம், தாயனூர்,
தோலம்பாளையம், வெள்ளியங்காடு ஆகிய பகுதிகளிலும் பொள்ளாச்சி,
கிணத்துக்கடவு, மதுக்கரை, தொண்டாமுத்தூர் ஆகிய பகுதிகளிலும் விவசாயம்
பிரதான தொழிலாக செய்யப்பட்டு வருகிறது.

இதில் வாழை, கறிவேப்பிலை பயிர்களையடுத்து விவசாயிகள் தக்காளி சாகுபடி
அதிகமாக பயிரிடப்பட்டு வருகின்றனர். விவசாயிகள் செடிகளில் தக்காளிகளை
தினசரி அறுவடை செய்து மேட்டுப்பாளையம், காரமடை, பொள்ளாச்சி, கோவையில்
உள்ள சந்தைகளுக்கு தினசரி கொண்டு சென்று விற்பனை செய்கின்றனர்.
இந்த நிலையில் தற்போது 15 கிலோ வரை எடை கொண்ட ஒரு டிப்பர் தக்காளி மிகவும்
விலை வீழ்ச்சி ஏற்பட்டுள்ளது. ரூ.100 மட்டுமே விலை போவதால் விவசாயிகள்
கவலை அடைந்து உள்ளனர்.

கடந்த காலங்களில் ரூ.40 முதல் ரூ.50 வரை விற்பனை செய்து வந்த நிலையில்
தற்போது விலை சற்று உயர்ந்தாலும் கட்டுப்படியான விலை கிடைக்காமல்
உள்ளதாக தக்காளிகளை விற்பனை செய்யும் சந்தைகளுக்கு கொண்டு செல்ல
போக்குவரத்து செலவுக்கு கூட போதுமானதாக இல்லை என விவசாயிகள் தேனையை
தெரிவிக்கின்றனர். இந்த நிலையில் தற்போது அதற்கு உரிய விலை இல்லாததால் விவசாயிகள் பலர் தற்போது தக்காளியை பறிக்காமல் செடிகளிலேயே விட்டுவிடுகின்றனர். அழுகிய நிலையில் உள்ள தக்காளிகளை அங்கேயே கொட்டி வருகிறார்கள். இதுகுறித்து சாதி மதம் கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கம் மாநில பொது செயலாளர் கந்தசாமி கூறும்போது, மாற்று பொருளாதார கொள்கை
விவசாயிகள் எப்போதும் ஏதாவது பிரச்சினைகளை சந்தித்து வருகின்றனர். கடந்த
சில நாட்களுக்கு முன்பு சின்னவெங்காயத்திற்கு போதிய விலை கிடைக்காமல்
கஷ்டப்பட்டு வந்தனர். இந்த நிலையில் தற்போது தக்காளி விலை வீழ்ச்சியால்
அவதி அடைந்து உள்ளனர்.
ஒரு விவசாயிக்கு ஒரு டிப்பர் தக்காளி உற்பத்தி செய்ய ரூ.150 வரை செலவு
ஆகும். அதனை மார்க்கெட்டுக்கு கொண்டு வர குறைந்த பட்சம் 250 ரூபாய்
தேவைபடுகிறது. ஆனால் மார்க்கெட்டில் ஒரு டிப்பர் ரூ.100 மட்டுமே விலை
போவதால் விவசாயிகள் பெரும் நஷ்டம் அடைந்து வருகிறார்கள்.
40 ரூபாயிக்கு விற்பனையான தக்காளி ரூ.100 ஆக உயர்ந்தாலும் லாபம்
கிடைப்பதில்லை. இதனால் தக்காளியை பயிரிட்ட விவசாயிகள் கூலி கூட
கிடைக்காததால் அதனை செடிகளிலேயே விட்டுவிடுகின்றனர். அரசு இதற்கு
மாற்று பொருளாதார கொள்கையை ஏற்படுத்த வேண்டும். இந்த மாதிரி
நேரங்களிலாவது அரசு அதரவு விலையை நிர்ணயம் செய்து ரேசன் கடைகளில் விற்பனை செய்ய வேண்டும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.