வரதட்சணை கேட்டு மனைவிக்கு கொலை மிரட்டல்-கணவர், மாமனார், மாமியார் மீது வழக்குபதிவு ..!

கோவை வடவள்ளி, தொண்டாமுத்தூர் ரோட்டில் உள்ள ஒரு அப்பார்ட்மெண்டில் வசிப்பவர் அஸ்கிஸ் (வயது 33) இவர் காவியா ஜெயின் (வயது 29) என்பவரை 2 – 7 – 2021 அன்று 2-வது திருமணம் செய்து கொண்டார்.இவர் மனைவியிடம் வரதட்சணையாக 450 கிராம் தங்க நகைகள் வாங்கி இருந்தார்.இவர் குடிப்பழக்கம் உடையவர். சம்பவத்தன்று இவர் குடிபோதையில் வீட்டுக்கு வந்து மனைவியை தாக்கி, கொலை மிரட்டல் விடுத்ததாக கூறப்படுகிறது.இதனால் காவிய ஜெய் தனது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார்.இது குறித்து பேரூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. இன்ஸ்பெக்டர் அமுதா இது தொடர்பாக விசாரணை செய்து கணவர் அஸ்கிஸ் ( வயது 33) மாமனார் ஆனந்த் சேத்தியா, மாமியார் பத்மா சேத்தியா ஆகியோர் மீது வரதட்சணை கொடுமை, கொலை மிரட்டல், நம்பிக்கை மோசடி தாக்குதல், உட்பட 5 பிரிவின் வழக்கு பதிவு செய்து தேடி வருகிறார்.