கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் திடீர் ஆய்வு..!!

இராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை தாலுகா அலுவலகத்தில் கலெக்டர் விஷ்ணு சந்திரன் திடீர் ஆய்வு செய்தார். கலெக்டர் விஷ்ணு சந்திரனை கீழக்கரை தாசில்தார் பழனிகுமார் வரவேற்றார். கம்யூட்டர் பணியாளரிடம் கலைஞர் மகளிர் உரிமை திட்டங்கள் கணினியில் எவ்வாறு ஏற்றப்படுகிறது என விளக்கம் கேட்டார்.

கீழக்கரை தாலுகா பணியாளர்கள் தனது அன்றாட பணிகளை விளக்கினார். மேலும் ஒவ்வொரு  ஊழியர்களும் தங்களது பணிகளை கோப்புகளை கலெக்டரிடம் காட்டி பாராட்டைப் பெற்றனர்.பின்பு பதிவு வைப்பு அறையை பரர்வையிட்டார்.

பின்னர் தாலுகா அலுவலகம் முன்பு மரக்கன்றுகளை நட்டார். கீழக்கரை வட்டாட்சியர் பழனி குமார், சமூக நலம் தாசில்தார் சேகு ஜலாலுதீன், தலைமை நில அளவர் சொக்கநாதன் ,தலைமையிடத்து துணை வட்டாட்சியர் மீனாட்சிசுந்தரம் ,துணைவட்டாட்சியர் பரமசிவன் ,கீழக்கரை வருவாய் ஆய்வாளர் வேல்முருகன், திருப்புலானி வருவாய் ஆய்வாளர்  சரவணகுமார், உத்திரகோசமங்கை வருவாய் ஆய்வாளர் பகவதி, அலுவலக பணியாளர்கள் ஜெயகுமார், கண்ணன் கிராம நிர்வாக அலுவலர்கள் மற்றும் கிராம உதவியாளர்கள் உடனிருந்தனர்..