கோவை பள்ளி மாணவர்களுக்கு மக்கும், மக்காத குப்பைகள் குறித்து விளையாட்டு மூலம் விழிப்புணா்வு..!

கோவை மாநகராட்சி, கிழக்கு மண்டலம் உப்பிலிபாளையம் எஸ்.எஸ்.வி.எம் பள்ளி வளாகத்தில் மக்கும், மக்காத குப்பைகளைத் தரம் பிரிக்கும் முறைகளை, பள்ளி மாணவா்களுக்கு
முறையில் கற்பிக்கும் விதமாக வடிவமைக்கப்பட்ட ‘பிரி பிரி’ என்னும் விளையாட்டுப் பெட்டகத்தை மாவட்ட கலெக்டர சமீரன் வெளியிட, மநகராட்சி கமிஷனர் பிரதாப் பெற்றுக் கொண்டார். இதைத் தொடர்ந்து மாவட்ட கலெக்டர் சமீரன் பேசியதாவது: திடக்கழிவு மேலாண்மை தற்போதைய சூழலில் சவாலான பணியாக உள்ளது. கோவை மாநகராட்சியில் சுமார் 5.25 லட்சம் குடியிருப்புகள், வணிக மற்றும் தொழில் நிறுவனங்கள், பள்ளிகள், கல்லூரிகள் இயங்கி வருகின்றன. தினமும் மாநகரில் 1,200 டன் குப்பைகள் சேகரமாகின்றன. மாணவர்கள் குட்டிக் காவலர்களாக இருந்து தங்கள் வீடுகளில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என தரம் பிரித்து தூய்மைப் பணியாளர்களிடம் வழங்குவதைக் கண்காணிக்க வேண்டும்.
திடக்கழிவு மேலாண்மை முறையை பள்ளி பருவத்திலேயே அறிந்து, அதுகுறித்து பிறரிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் பணியை சிறப்பாக மேற்கொள்ள வேண்டும் என்றார்.
இந்நிகழ்ச்சியில், மாநகராட்சி துணை கமிஷனர் ஷர்மிளா மற்றும் மாநகராட்சி அலுவலர்கள், தன்னார்வலர்கள் பலர் கலந்துகொண்டனர்.